Advertisment

ஒலிம்பிக் ரசிகர்களுக்கு இப்படி ஒரு செய்தியா?

கொரோனா தொற்று நோய் பல்வேறு முக்கியமான நிகழ்வுகளை இந்த வருடத்தில் நடக்கவிடாமல் செய்துவிட்டது .

author-image
WebDesk
New Update
Tokyo Olympics to give refunds to ticket buyers in Japan

Tokyo Olympics to give refunds to ticket buyers in Japan :  கொரோனா தொற்று நோய் பல்வேறு முக்கியமான நிகழ்வுகளை இந்த வருடத்தில் நடக்கவிடாமல் செய்துவிட்டது . அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக உலக அளவில் பார்க்கப்பட்டுவது ஒலிம்பிக் போட்டிகள் தான். இந்த ஆண்டு ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசிக்க டிக்கெட்களை வாங்கிய ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ஒலிம்பிக் கமிட்டி.

Advertisment

நவம்பர் 10 முதல் 30 தேதிகளில் வாங்கிய டிக்கெட்டிற்கான ரீஃபண்டினை ஜப்பானில் உள்ள ரசிகர்கள் ஆன்லைன் மூலம் அப்ளே செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானிற்கு வெளியே வாங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரீஃபண்டினை அங்கிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் விற்பனை தளத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது அந்நாடு.

அடுத்த  ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்கள், இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் ரீஃபண்ட் செய்யப்படும் என்று  ஏற்கனவே ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தது. பாராஒலிம்பிக் போட்டிகளை காண டிக்கெட் பதிவு செய்திருந்தவர்கள் டிசம்பர் 1 முதல் 21ம் தேதி வரை ஆன்லைனில் அப்ளே செய்து தங்களின் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment