தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்.. சந்தோஷத்தை கொண்டாடும் முன்பே நடந்த துயரம்!

சுமார் 2 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேஜீந்தர் சிங்கின் தந்தையின் மரணம்

நடந்து முடிந்த 18 ஆவது ஆசியப் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த இந்திய வீரர் தேஜீந்தர் சிங் தூரின் வீடு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தங்கம் வென்ற சந்தோஷத்தை கொண்டாடும் முன்பே இந்த துயர சம்பவம் அரங்கேறியது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்க மகன் தேஜீந்தர் சிங்:

இந்தோனேசியாவில் நடைப்பெற்ற 18 ஆவது ஆசியப் போட்டில், இந்திய வீரர் தேஜீந்தர் சிங் தூரி குண்டு எறிதல் போட்டியில் கலந்துக் கொண்டார். இந்தியா சார்பில் போட்டியிட்ட 23 வயது வீரர் தஜேந்திர பால் சிங் 20.75 மீட்டர் தொலைவு குண்டு எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த ஆசியப் போட்டியில் தேஜீந்தர் சிங் தூரி இந்தியாவுக்கு 7 ஆவது தங்கத்தை சொந்தமாக்கி தந்தார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தனர். இந்த சந்தோஷத்தை தனது குடும்பத்தாருடன் கொண்டாட ஆசை ஆசையாக சொந்த ஊர் திரும்பிய தேஜீந்தர் சிங்குக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

தேஜீந்தர் சிங்கின் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் ஆகும். அவரின் தந்தையில் மிகப் பெரிய ஆசை அவரை எப்படியாவது ஆசியப் போட்டியில் விளையாட வைத்து ,இந்தியாவிற்கு தங்கத்தை அடிக்க வேண்டும் என்பதே. இந்த ஆசையை பலமுறை அவரின் தந்தை தேஜீந்தர் சிங்கிடம் கூறியுள்ளார்.

இதை அப்படியே நிஜமாக்கியுள்ளார் தேஜீந்தர் சிங். ஆனால் இந்த சந்தோஷத்தை தனது தந்தையுடன் பகிர்ந்துக் கொள்ள சென்றார் தேஜீந்தர் சிங். ஆனால் அதற்குள் அவர் தந்தையின் இறப்பு செய்தித்தான் முதலில் வந்தது. மகன் வாங்கிய பதக்கத்தை தனது கையால் தொட்டு ,ரசிப்பதற்குள் அவர் இறந்து விட்டார். சுமார் 2 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேஜீந்தர் சிங்கின் தந்தையின் மரணம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close