உலகின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று கபடி. எப்போதும் பரபரப்பாக ஆடப்படும் இந்தப் போட்டி தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. தமிழ் மண்ணில் இருந்து இந்தியா முழுதும் பரவிய இந்த விளையாட்டு இப்போது பல நாடுகளில் விளையாடப்படுகிறது. சர்வதேச அளவில் கபடியில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் பாணியில் தொடங்கப்பட்ட புரோ கபடி லீக் 'கபடி' விளையாட்டுக்குப் புதிய உயிர் கொடுத்துள்ளது எனலாம். இந்த லீக் போட்டி மூலம் பல வீரர்கள் முன்னணி வீரர்களாக உருவெடுத்து உலக அளவில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்த வகையில், கபடி போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக, இந்தியாவை ஆதிக்கம் செலுத்த உதவிய சிறந்த 5 வீரர்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
மோஹித் சில்லர்
/indian-express-tamil/media/post_attachments/de7f2bd3-52a.jpg)
இந்தியா இதுவரை கண்ட சிறந்த டிஃபென்ஸ் வீரர்களில் மோஹித் சில்லர் ஒருவர். கபடி உலகக் கோப்பை, ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2017, துபாய் கபடி மாஸ்டர்ஸ் 2018 மற்றும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல வெற்றிகளுக்கு இந்தியாவை வழிநடத்துவதில் மோஹித் முக்கிய பங்கு வகித்தார்.
பி.கே.எல் தொடரில் அவர் 109 போட்டிகளில் 277 டேக்கிள் புள்ளிகளைப் பெற்று இருக்கிறார். இதில் 18 ஹை 5-கள் மற்றும் 23 சூப்பர் டேக்கிள்கள் அடங்கும்.
சந்தீப் நர்வால்
இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக சந்தீப் நர்வால் இருந்தார். அவர் டிஃபென்ஸ் மற்றும் அட்டாக் செய்து ஆடுவதில் சிறப்பாக இருந்தார். 2016 கபடி உலகக் கோப்பை, 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப் மற்றும் 2018 இல் துபாய் கபடி மாஸ்டர்ஸ் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு அவர் தனது சிறப்பான பங்கை ஆற்றி இருந்தார். அவரின் இந்த பங்களிப்பிற்காக 2021 இல் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றார்.
/indian-express-tamil/media/post_attachments/4875a41d-a5c.jpg)
பி.கே.எல் தொடரில் சந்தீப் நர்வால் 18 ஹை 5-கள் மற்றும் 285 ரெய்டு புள்ளிகள் உட்பட 360 டேக்கிள் புள்ளிகளை எடுத்துள்ளார். மேலும், 3 மற்றும் 8 சீசன்களில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் முறையே சாம்பியன் பட்டத்தை வாகை சூடுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
மஞ்சீத் சில்லர்
இந்தியாவின் வெற்றியில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக குறிப்பிடத்தக்க பங்கை வகித்த மற்றொரு ஆல்ரவுண்டர் மஞ்சீத் சில்லர் ஆவார். அவர் 2010 மற்றும் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் இருந்தார். 2014 ஆசிய இண்டோர் - விளையாட்டுப் போட்டிகள், 2016 கபடி உலகக் கோப்பை மற்றும் 2018 துபாய் கபடி மாஸ்டர்ஸ் ஆகியவற்றிலும் அவர் இடம்பெற்றார். அந்தப் போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பிற்காக 2015 இல் அர்ஜுனா விருதைப் பெற்றார் மஞ்சீத் சில்லர்.
/indian-express-tamil/media/post_attachments/c798ce09-930.jpg)
புரோ கபடி லீக் தொடரிலும் மஞ்சீத் சில்லர் நட்சத்திர வீரராக வலம் வந்தார். இத்தொடருக்கான இரண்டாவது சீசனில் எம்.வி.பி பட்டத்தை வென்றார், அத்துடன் லீக்கில் சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருந்தார். இத்தொடரில் அவர் 220 ரெய்டு புள்ளிகளையும் கிட்டத்தட்ட 400 டேக்கிள் புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறார்.
தீபக் நிவாஸ் ஹூடா
இந்திய அணியின் அற்புதமான ஆல்ரவுண்டர் வீரர் தீபக் நிவாஸ் ஹூடா ஆவார். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டி, 2016 கபடி உலகக் கோப்பை, தொடர்களில் கோப்பைகளை இந்தியா வென்றபோது அவர் அணியில் முக்கிய வீரராக இருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டு இருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/c9c2491c-127.jpg)
தீபக் நிவாஸ் ஹூடா புரோ கபடியில் 1020 ரெய்டு புள்ளிகளையும் 99 டேக்கிள் புள்ளிகளையும் எடுத்துள்ளார்.
ஜஸ்விர் சிங்
இந்தியாவின் மற்றொரு தரமான ரைடர் ஜஸ்விர் சிங். இவர் கடந்த 2014 ஆசிய விளையாட்டு மற்றும் 2016 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்திய கபடிக்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக 2017 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதைப் பெற்றார்.
/indian-express-tamil/media/post_attachments/a2309a1e-007.jpg)
பி.கே.எல் தொடரின் தொடக்க சீசனில் கோப்பை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியில் ஆடிய இவர், அந்த அணி கோப்பையை முத்தமிட இவர் முக்கிய பங்காற்றி இருந்தார். ஜஸ்விர் சிங் 7 சூப்பர் 10-கள் உட்பட 380 ரெய்டு புள்ளிகளை எடுத்துளளது. மேலும் 7 சூப்பர் டேக்கிள்கள் உட்பட 32 டேக்கிள் புள்ளிகளுடன் திறமையான டிஃபெண்டராகவும் இருந்தார்.