Advertisment

'ராஷ்மிகா மீது கிரஷ்': கில் அதிர்ச்சி, 'ஸ்டிரைக் ரேட்' பற்றி கே.எல். ராகுல் ஓபன் டாக்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான இந்திய இளம் வீரர் சுப்மான் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் உள்ளது என ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.

author-image
WebDesk
New Update
Top 5 Cricket News In Tamil, 07 March 2023

Today Sports – Cricket News in tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Advertisment
  1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸி,.-டம் இந்தியா டிரா அல்லது தோற்றால் என்ன ஆகும்?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்கான 3வது போட்டியில் இந்தியாவை வென்றதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய தகுதி பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

publive-image

ஆனால், 3வது இடத்தில் உள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு கடும் போட்டியாளராக உள்ளது. இதனால், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (WTC) புள்ளிகள் அட்டவணையில் ஆஸ்திரேலியா 68.52 சதவித புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 60.29 சதவித புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்திலும், 53.33 சதவித புள்ளிகளுடன் இலங்கை 3வது இடத்திலும் உள்ளது. எனவே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

WTC 2021-23 final: Sri Lanka vs India scenorios in tamil

அகமதாபாத்தில் நடக்கும் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்தியா டிரா செய்தால், அவர்களின் சதவித புள்ளிகள் 52.9 ஆக குறையும். ஆனால் இலங்கை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யத் தவறினால், இந்தியா தகுதி பெற்று விடும்.

இந்தியா தோற்றால், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் தேதி தான் தொடங்குகின்றன. எனவே, இந்த இரு போட்டிகளின் முடிவுகளுக்காகவும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து இருப்பார்கள்.

  1. 'மோசமான ஆடுகளம்': இந்தூர் பிட்ச் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ அப்பீல்

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3வது போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடந்தது. போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்த நிலையில், இந்தூர்ஆடுகளம் "மோசமான ஆடுகளம்" என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும், ஆடுகளத்துக்கு 3 அபராத புள்ளிகளையும் வழங்கினார்.

publive-image

இந்த நிலையில், இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பேசுகையில், `நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுப் போம்' என்றார். ஐ.சி.சி. விதிகளின்படி மேல்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. ஒரு மைதானம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அபராத புள்ளிகளை பெற்றால் அங்கு 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த முடியாது.' என்று கூறியுள்ளார்.

  1. 'ராஷ்மிகா மீது கிரஷ்': அதிர்ச்சி அடைந்த சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி இளம் வீரராக விளையாடி வருபவர் சுப்மன் கில். 23 வயதான இவர் 3 வடிவ கிரிக்கெட் கிரிக்கெட்டிலும் சதம் விளாசியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த தொடர்களில் அதிரடியாக விளையாடிய இவர் தற்போது நடந்து வரும் பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரமான சுப்மான் கில், நடிகை ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கில்லை டேக் செய்து கமெண்டுகளை பதிவிட்டனர். இதனால், சுப்மான் கில் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா பெயர்கள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

publive-image

இந்த நிலையில், இந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சியடைந்த சுப்மன் கில், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், "இது எந்த ஊடகத்தில் பேசப்பட்டது, எனக்கே எதுவும் தெரியாது" என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, சுப்மன் கில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை காதலிக்கிறார் என்றும், அடுத்து பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்து வருவதாகவும் வதங்கிகள் பரவின.

publive-image
  1. 'மிகைப்படுத்தப்படும் ஸ்டிரைக் ரேட்': கே.எல்.ராகுல் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுலின் ஃபார்ம் குறித்து கடந்த சில வாரங்களாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவரின் குறைந்த ஸ்கோர் மற்றும் அவரது குறைவான செயல்திறன்களுக்காக அவர் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் அணியில் இருந்து ராகுல் நீக்கப்பட்டார்.

ராகுல் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 25 -க்கு மேல் ஸ்கோர் இல்லாமல் 12.5 சராசரியாக இருந்தார். அவரது ஸ்கோரின் வரிசை 8, 10, 12, 22, 23, 10, 2, 20, 17, மற்றும் 1 என உள்ளது. இது அவர் ஆடும் லெவனில் இடம் பிடிப்பது பற்றிய கேள்விகளை எழுப்பியது.

publive-image

ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) 2023 சீசனுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அவர் வழிநடத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஜெர்சி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல், டி20 கிரிக்கெட் வடிவத்தில் 'ஸ்டிரைக் ரேட்' பற்றி தொடர்ந்து கவலைப்பட கூடாது என்றும் 'ஸ்டிரைக்-ரேட் ஆவேசம்' தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

"ஸ்டிரைக் ரேட் அதிகமாக மதிப்பிடப்பட்டதாக நான் நினைக்கிறேன். ஆனால் இது தேவையைப் பொறுத்தது. நீங்கள் 140 ரன்களைத் துரத்தினால் அது தேவை. அதற்கு நீங்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் செல்லத் தேவையில்லை. இது தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது." என்று அவர் கூறியுள்ளார்.

publive-image

ராகுல் 109 ஐ.பி.எல் போட்டிகளில், 48.01 சராசரி மற்றும் 136.22 ஸ்ட்ரைக் ரேட்டில் 3889 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

  1. அகமதாபாத் டெஸ்ட்: வரலாறு படைக்குமா ரோகித் அண்ட் கோ

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வேறு எந்த சர்வதேச அணியும் சாதிக்க முடியாத ஒரு வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கிறார்கள். அந்த என்ன வகையான சாதனை என்று இங்கு பார்க்கலாம்.

publive-image

2013-ம் ஆண்டு முதல், சொந்த மண்ணில் இந்தியா தொடர்ந்து 15 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும். உலகில் வேறு எந்த அணியும் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை. அந்த வகையில் இந்தியா ஏற்கனவே நம்பர் ஒன் அணியாக உள்ளது. இந்தியாவுக்குப் பிறகு, ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இரண்டு முறை தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

publive-image

சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற டெஸ்ட் தொடர் விபரம் பின்வருமாறு:-

ஆஸ்திரேலியா: இந்தியா 4-0 (4), பிப்ரவரி 2013

வெஸ்ட் இண்டீஸ்: இந்தியா 2-0 (2), நவம்பர் 2013

தென்ஆப்பிரிக்கா: இந்தியா 3-0 (4), நவம்பர் 2015

நியூசிலாந்து: இந்தியா 3-0 (3), செப்டம்பர் 2016

இங்கிலாந்து: இந்தியா 4-0 (5), நவம்பர் 2016

வங்கதேசம்: இந்தியா 1-0 (1), பிப்ரவரி 2017

ஆஸ்திரேலியா: இந்தியா 2-1 (4), பிப்ரவரி 2017

இலங்கை: இந்தியா 1-0 (3), நவம்பர் 2017

ஆப்கானிஸ்தான்: இந்தியா 1-0 (1), ஜூன் 2018

வெஸ்ட் இண்டீஸ்: இந்தியா 2-0 (2), அக்டோபர் 2018

தென்ஆப்பிரிக்கா: இந்தியா 3-0 (3), அக்டோபர் 2019

வங்கதேசம்: 2019 நவம்பர் 2-0 (2), இந்தியா

இங்கிலாந்து: இந்தியா 3-1 (4), 2020-2021

நியூசிலாந்து: இந்தியா 1-0 (2), 2021

இலங்கை: இந்தியா 2-0 (2), 2022.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Rohit Sharma Cricket Indian Cricket Team World Test Championship Ahmedabad Kl Rahul Lucknow Super Giants Indian Cricket Shubman Gill Indore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment