Indian Football: அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் ஜொலிக்கும் பிரபலங்கள் ஃபேஸ்புக், எக்ஸ் (முன்பு ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களது இருப்பை நிர்வகித்து வருகிறார்கள். அவர்கள் தாங்களாகவோ அல்லது சமூக ஊடகங்களை நிர்வகிப்பவர்கள் மூலமாகவோ அவ்வப்போது போஸ்ட்களை தட்டி விடுகிறார்கள். இதில் வெகு சிலரே இந்த தளங்கள் வழியாக முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள்.
நவீன உலகத்தில் இணையம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெருகிறதோ, அதனுடன் தொடர்புடைய சமூக வலைதளங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தளங்களின் மூலம் விளையாட்டு உலகில் இருக்கும் கால்பந்து பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மேலும், சமூக ஊடக விளம்பரங்களின் மூலம் கூடுதல் வருமானத்தையும் ஈட்டுகிறார்கள்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பிரபலமாக வலம் வரும் அதிக பின்தொடர்பவர்களை வைத்துள்ள 5 இந்திய கால்பந்து நட்சத்திர வீரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
5. ஆஷிக் குருனியன் (மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்)
கால்பந்தில் விங்-பேக்காக சிறந்து விளங்கும் திறன் கொண்டவர் குருனியன். அவரது வேகம் மற்றும் இடைவிடாத ஆட்டத்திற்காக மிகவும் பாராட்டப்படுகிறார். களத்தில் அவரது பன்முகத்தன்மை ரசிகர்கள் மத்தியில் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அவரை இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்து 27 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 1 லட்சத்து 77 ஆயிரம் பேரும் மற்றும் எக்ஸ் தளத்தில் 5 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.
சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க ரசிகர் ஆதரவைப் பெற்றுள்ள குருனியன், ரசிகர்களின் விருப்பமானவர் மட்டுமல்ல, இந்திய தேசிய அணிக்கு முக்கிய வீரரும் ஆவார். இந்திய அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் வழங்குகிறார்.
4. சந்தேஷ் ஜிங்கன் (எஃப்.சி கோவா)
ஜிங்கன், அவரது உடல் வலிமை மற்றும் தலைமைப் பண்புகளுக்காகப் புகழ் பெற்ற முன்னணி டிஃபென்டராக வலம் வருகிறார். 2014 ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் வளர்ந்து வரும் சிறந்த வீரருக்கான விருதை மீண்டும் ஒருமுறை வென்றார். 2015 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அணிக்காக அறிமுகமான அவர் சர்வதேச கால்பந்து அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவராக, ஜிங்கன் ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகம் விரும்பப்படும் வீரராக உள்ளார். அவரை இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்து 34 ஆயிரம் பேரும், எக்ஸ் தளத்தில் 1 லட்சத்து 57 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில் 1லட்சத்து 71 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் ஜிங்கன்.
இந்திய கால்பந்தாட்டத்திற்கான சந்தேஷ் ஜிங்கனின் சிறப்பான பங்களிப்புகளுக்கு சான்றாக, ஜிங்கனுக்கு 2020 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. குர்பிரீத் சிங் சந்து (பெங்களூரு எஃப்.சி)
கால்பந்தில் ஐரோப்பிய கிளப்பின் முதல் அணிக்கான பங்கேற்ற முதல் இந்தியர் என்பது உட்பட பல பெருமைகளை கொண்டுள்ளார் குர்பிரீத் சிங் சந்து. அவர் முகமது சலீம், பைச்சுங் பூட்டியா, சுனில் சேத்ரி மற்றும் சுப்ரதா பால் போன்ற குறிப்பிடத்தக்க முன்னோடிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார், ஐரோப்பாவில் தொழில் ரீதியாக தனது வர்த்தகத்தை மேற்கொள்ளும் 5வது இந்தியராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், யுஇஎஃப்ஏ யூரோபா லீக் அரங்கை அலங்கரிக்கும் முதல் இந்திய வீரராக அவர் வரலாறு படைத்தார்.
தேசிய அணிக்கான மறுக்கமுடியாத முதல்-தேர்வு கோல்கீப்பராக, அவரது செயல்பாடுகள் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஊக்குவித்து, கவர்ந்திழுக்கிறது. இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பின்தொடர்பவர்கள், எக்ஸ் தளத்தில் 75 ஆயிரம் பின்தொடர்பவர்கள் மற்றும் பேஸ்புக்கில் 20 லட்சத்து ஆயிரம் பின்தொடர்பவர்கள் என முன்னணி இந்திய கால்பந்து பிரபலமாக வலம் வருகிறார்.
2. சாஹல் அப்துல் சமத் (மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட்)
அவரது விதிவிலக்கான டிரிப்ளிங் திறமை மற்றும் ஈர்க்கக்கூடிய வேகம் ஆகியவற்றால் புகழ்பெற்ற சாஹல், நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராக உள்ளார். தற்போது மோகன் பாகன் அணியில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் அவர், தன்னை மிகவும் நேசிக்கும் ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தை பிடித்துள்ளார். இந்திய தேசிய அணியில் ஒரு முக்கிய நபராக, சஹால் தொடர்ந்து ஒரு தொடக்க வீரராக தனது இடத்தைப் பெறுகிறார், அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
அவருக்கு பேஸ்புக்கில் 30 லட்சத்து 8 ஆயிரம் பின்தொடர்பவர்கள், இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் பின்தொடர்பவர்கள் மற்றும் எக்ஸ் தளத்தில் 51 பின்தொடர்பவர்களுடன் சாஹல் கவனத்தை ஈர்க்கிறார். இந்த கணிசமான பின்தொடர்பவர்க மூலம் பல்வேறு தளங்களில் அவர் பெறும் பரவலான போற்றுதலையும் ஆதரவையும் பிரதிபலிக்கிறார். மேலும் இந்திய கால்பந்தில் பிரபலமான நபராக அவரது நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறார்.
1. சுனில் சேத்ரி (பெங்களூரு எஃப்.சி)
சர்வதேச கால்பந்து போட்டிகளில் மூன்றாவது அதிக கோல்கள் அடித்தவர் என்கிற பெருமை பெற்ற இந்திய நட்சத்திரமாக சுனில் சேத்ரி ஜொலிக்கிறார். உலகின் முன்னணி கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு ஈடாக இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் சுனில்.
கூடுதலாக, இந்திய தேசிய அணிக்காக அதிக முறை விளையாடிய வீரர் மற்றும் எல்லா நேரத்திலும் முன்னணி கோல் அடித்தவர் என்ற மதிப்பிற்குரிய சாதனைகளை படைத்துள்ளார். இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக அவரது பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகிறார். இந்திய கால்பந்தில் சுனில் சேத்ரியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் அவருக்கு பரவலான பாராட்டுகளையும் மரியாதையையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
அவரது சிறந்த விளையாட்டு சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், சேத்ரிக்கு 2011 இல் அர்ஜுனா விருதும், 2019 இல் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு கௌரவமான கேல் ரத்னா விருதைப் பெற்று புதிய உச்சத்தை எட்டினார். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்கிற பெருமையும் பெற்றார்.
இன்ஸ்டாகிராமில் 7.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், எக்ஸ் தளத்தில் 1.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும், பேஸ்புக்கில் 1.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும் சுனில் சேத்ரி மில்லியன் கணக்கான ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். இந்திய கால்பந்தின் ஐகானாகவும் அவர் திகழ்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.