Ipl-2024 | IPL 2024 Auction | chennai-super-kings: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் வருகிற 19ம் தேதி துபாயில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வீரர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர். வீரர்களை வாங்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.38 கோடியே 15 லட்சத்தை கையிருப்பாக வைத்துள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
இந்நிலையில், வருகிற செவ்வாய்கிழமை நடைபெற உள்ள மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) வசப்படுத்த இலக்கு வைக்கும் 5 வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
/indian-express-tamil/media/post_attachments/5bc46497-604.jpg)
ரச்சின் ரவீந்திரா
இந்த ஐ.பி.எல் ஏலத்தில் நியூசிலாந்தின் ஆல்ரவுண்டர் வீரரான ரச்சின் ரவீந்திராவுக்கு அதிக மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 வயதான அவரை வசப்படுத்த அனைத்து அணிகளும் நிச்சயம் போட்டி போடும்.
/indian-express-tamil/media/post_attachments/492b2136-96c.jpg)
ஏனென்றால், அண்மையில் இந்திய மண்ணில் நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். பகுதி நேர பந்துவீச்சாளராகவும் அவரால் அணிக்கு உதவ முடியும். இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதனால், அவரை எப்படியாவது வளைத்துப்போட சி.எஸ்.கே திட்டம் போடும்.
டேரில் மிட்செல்
சி.எஸ்.கே பெரிதும் தேவைப்படும் மற்றொரு ஆல்ரவுண்டராக டேரில் மிட்செல் உள்ளார். நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் அவர் மிடில் ஓவர்களில் பவர்-ஆங்கர் ரோலை வகிக்க அவரால் முடியும்.
/indian-express-tamil/media/post_attachments/09cd7d7010ba24d6a1d08219c8cb9411099cd43179f03abe4b39224f78a2306e.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து வீரர்கள் வரலாற்று ரீதியாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த வீரர்களை இரண்டு வீரர்களை வாங்க ஏலத்தில் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இதற்கான திட்டங்களை தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குடன் இணைந்து கேப்டன் தோனி ஏற்கனவே போட்டு வைத்திருப்பார்.
மனிஷ் பாண்டே
/indian-express-tamil/media/post_attachments/bc0399f8-633.jpg)
மனிஷ் பாண்டே கடந்த சில சீசன்களில் ஐ.பி.எல்-லில் சிறப்பாக விளையாடவில்லை. அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH)அணியில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிக்கு சென்றார். அங்கும் அவரால் தன்னை நிரூபிக்க முடியவில்லை. மனிஷ் பாண்டேவால் நிலையான ஸ்திரத்தன்மையை வழங்க முடியும் என்பதால் தோனி அவரை வாங்க விரும்பலாம். அவருக்கு ஒரு தெளிவான ரோல் வழங்கப்பட்டால், மனிஷ் தனது ஐபிஎல் வாழ்க்கையை இன்னும் சுவரசியமாக்க முடியும். அது தோனியின் அணியில் மட்டுமே நடக்கும்.
ஷாருக்கான்
தமிழக வீரரான ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. உண்மையில் அவர் கவனத்தை ஈர்க்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரை சரியாக பயன்படுத்தவும் பஞ்சாப் கிங்ஸ் தவறி இருந்தது.
/indian-express-tamil/media/post_attachments/d0bb5b15-70f.jpg)
தற்போது ஷாருக்கான் தனது சொந்த மாநிலத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சி.எஸ்.கே அணிக்கு திரும்பலாம். சென்னையைச் சேர்ந்த அவருக்கு தனது சொந்த மைதானத்தில் எப்படி பேட்டிங் செய்வது என்று நன்கு தெரியும். தோனியின் சி.எஸ்.கே அணிக்கு நிச்சயமாக ஒரு ஃபினிஷர் தேவை. ஷாருக் ஒருவராக மாறலாம்.
கருண் நாயர்
கிரிக்கெட் அதிர்ஷ்டம் இல்லாத வீரர்களில் ஒருவராக கருண் நாயர் இருந்து வருகிறார். பல்வேறு திறமைகளைக் கொண்ட அவருக்கு தேசிய அணியிலோ அல்லது ஐ.பி.எல். அணியிலோ நீண்ட காலம் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
/indian-express-tamil/media/post_attachments/8d29a89c-22f.jpg)
சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசி கவனம் ஈர்த்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரை வாங்க அதிக போட்டி இருக்காது என்பதால் அவரின் அடிப்படை விலையிலே சென்னை அணி வாங்க விரும்பலாம்.
சி.எஸ்.கே தக்கவைத்துள்ள வீரர்கள்
எம்.எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷக்யா ரஹானே , மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“