Advertisment

சமூக வலைதளத்தில் நம்பர் ஒன்… அசத்தும் டென்னிஸ் வீராங்கனை… டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகள்!

டென்னிஸ் வீராங்கனையான ரேச்சல் ஸ்டல்மேன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிம் மட்டும் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Top 5 sports news in tamil, 24 November 22

top sports news today in tamil

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Advertisment
  1. ஓய்வு பெற போகிறாரா தினேஷ் கார்த்திக்..? ரசிகர்களை குழப்பிய இன்ஸ்டா பதிவு

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார். தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டாலும், அவ்வப்போது களமாடும் ஆட்டங்களில் தனது திறனை நிரூபித்து வந்தார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, அணியில் ஒரு ஃபினிஷராக உருவெடுத்தார்.

இதன் காரணமாக, தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் ஃபினிஷராக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த போட்டிகளில் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்க தேச அணிகளுடன் இருதரப்பு தொடரில் விளையாடுகிறது. அந்த அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி கூறி தோனியை போலவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த வீடியோ மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளாரா? என்று தற்போது ரசிகர்கள் குழம்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

  1. சமூக வலைதளத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை

ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு போன்றவர்கள் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருப்பதுடன் சமூக வலைதளங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். அவ்வகையில், டென்னிஸ் வீராங்கனையான ரேச்சல் ஸ்டல்மேன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிம் மட்டும் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதன்மூலம் டென்னிசில் சமூக ஊடகம் வழியே அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்களின் வரிசையில் ரேச்சல் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார்.

publive-image

அமெரிக்காவின் மிசோரி பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்தவரான ரேச்சல், டிக்டாக்கில் பிரபல நபரானார். அவரது தந்திரம் நிறைந்த ஷாட்டுகளை பார்ப்பதற்காகவே, லட்சக் கணக்கான ரசிகர்கள் அவரை டிக்டாக்கிலும், இன்ஸ்டாவிலும் பின்தொடருகின்றனர். விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளேன் என கூறும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

publive-image

"கோல்ப் விளையாட்டில் தனது டிப்ஸ், எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை சமூக வலைதளம் வழியே பிரபல வீராங்கனை பெய்ஜ் ஸ்பைரனாக் வெளிப்படுத்தி வருகிறார். அதனை நான் மதிக்கிறேன். இதனை போன்று டென்னிசையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என ரேச்சல் கூறியுள்ளார்.

  1. இந்தியா vs நியூசிலாந்து: முதல் ஒருநாள் போட்டியில் நாளை மோதல்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.

publive-image

இந்த தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துகிறார். கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதேபோல், டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தொடரிலும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். டி20 தொடரை இழந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றும் முன்னைப்பில் உள்ளது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

  1. 50ஜிபி இலவச டேட்டா: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்ற ஒரு செய்தியும் சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு ஷேர் செய்தால், அவர்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம்பி பலரும் தற்போது அந்தச் செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள்.

publive-image

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 50 ஜிபி டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என்றும், அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  1. ஓராண்டு தடை விதிக்கப்பட்ட இலங்கை வீரர்

8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் களமாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் சமிகா கருனரத்தினே-வுக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

publive-image

ஆஸ்திரேலியாவில் சமிகா கருணரத்னே வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றும், வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறியதாகவும் இலங்கை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டினை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு பின்பே உறுதி செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அவர் எந்தெந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தெளிவான தகவலை இலங்கை வாரியம் வெளியிடவில்லை.

publive-image

அதேநேரத்தில், சமிகா கருணரத்னேவும் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் 5000 டாலர் அபராதமும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தற்காலிக தடை என்பதால் கருணரத்னே சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட முடியாது என்றாலும் லீக் போட்டிகளில் விளையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Srilanka Tennis Football Fifa Fifa World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment