Advertisment

ஸ்பெயினை சாய்த்த ஆஸி. அரை இறுதிக்கு முன்னேற்றம்... டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

ஐசிசி டி20 அணியில் 3வது மற்றும் 4வது இடத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Top 5 sports news today, 24 January 2023 in tamil

Top 5 cricket and sports news today

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Advertisment
  1. ஷமி மனைவி- மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜஹான் ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு பிரிந்து சென்றார்.

publive-image

இதனிடையே, 2018 ஆம் ஆண்டில், மாதாந்திர ஜீவனாம்சம் ரூ.10 லட்சம் கோரி ஹசின் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சமும், மகளின் பராமரிப்புக்காக ரூ.3 லட்சமும் கேட்டு இருந்தார். இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திங்கள்கிழமை, மாதாந்திர ஜீவனாம்சம் தொகை ரூ.1.30 லட்சமாக நிர்ணயம் செய்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்தாலும், மாதாந்திர ஜீவனாம்சம் அதிகமாக இருந்திருந்தால் தான் நிம்மதியா இருந்திருப்பேன் என்று ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.

  1. காதலியைக் கரம்பிடித்த ராகுல்

கே.எல்.ராகுலுக்கும் - அதியா ஷெட்டிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி கே.எல்.ராகுல் - அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுலும் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த இந்த காதல் ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. 2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணியில் 3 இந்திய வீரர்கள்

கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

3வது மற்றும் 4வது இடத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா 7வது இடத்தில் உள்ளார்.

publive-image

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி விவரம்:- 1. ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து) 2. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) 3. விராட் கோலி (இந்தியா) 4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) 5. க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து) 6. சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) 7. ஹர்திக் பாண்ட்யா (இந்தியா) 8. சாம் கரன் (இங்கிலாந்து) 9. வனிந்து ஹசரங்கா (இலங்கை) 10. ஹாரிஸ் ராப் (பாகிஸ்தான்) 11. ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து)

  1. ஆஸ்திரேலிய ஓபன்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி
publive-image

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தனர்.

இந்நிலையில் கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்ஸா-ரோகன் போபண்ணா அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர். இது குறித்து ரோகன் போபண்ணா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  1. உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதி ஆட்டங்கள் தொடக்கம்

15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, கொரியா அணிகள் 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன.

இன்று முதல் கால் இறுதி ஆட்டங்கள் தொடங்கும் நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி ஸ்பெயின் அணியை 4 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி முதலாவது அணியாக அறைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதியில் பெல்ஜியம்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பெல்ஜியம் அணி இந்த தொடரில் ஒரு தோல்வி அடையவில்லை. அந்த அணி தென் கொரியாவை 5-0 என்ற கணக்கிலும், 7-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.

இதனால், பெல்ஜியம் அணி நியூசிலாந்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். நியூசிலாந்து 'லீக்' சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது. நெதர்லாந்து (0-4), மலேசியாவிடம் (2-3) தோற்று இருந்தது. 2-வது சுற்றில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த தோல்வியால் தான் இந்தியா காலிறுதிக்கு முன்னேறவில்லை என்பது குறிபிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Tennis Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment