Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- திருமண பரிசில் நனையும் கே.எல் ராகுல் - நடிகை அதியா ஷெட்டி ஜோடி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுலுக்கும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்தத் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி கே.எல்.ராகுல் – அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இந்நிலையில், கே.எல் ராகுல் - நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அள்ளி கொடுத்துள்ளனர். அது பற்றிய தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது மகள் அதியா ஷெட்டிக்கு திருமண பரிசாக மும்பையில் 50 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது சக வீரரான ராகுலுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். இதன் விலை 2.17 கோடி. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்:
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசளித்துள்ளார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கலந்து கொண்டார். அவர் 30 லட்ச மதிப்பிலான சொகுசு வாட்சை பரிசாக கொடுத்துள்ளார்.
அதியா ஷெட்டியின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தனது தோழியின் திருமணத்திற்கு ரூ 1.5 கோடி மதிப்புள்ள வைர வளையலை பரிசாக அளித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன்: பெற்றோர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொண்டாடிய குழைந்தைகள்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த இணை காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்ஸா-ரோகன் போபண்ணா அரை இறுதிக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை சானியா மிர்ஸா-ரோகன் போபண்ணாஇணை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் சுமார் 1 மணி 52 நிமிடங்கள் நீடித்தது. இறுதியில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணா ஜோடி 7-6(5), 6-7(5), 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிபோட்டி வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்:
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு பெற்றோர்கள் முன்னேறியதை அடுத்து சானியா மிர்சாவின் மகன் ரோகன் போபண்ணாவின் மகள் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.
ஆஸ்திரேலிய ஓபனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், இந்திய டென்னிஸ் இரட்டையர் ஜோடியான சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா இருவரும் நேற்று புதன்கிழமை ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிப் போட்டிக்கு வந்த பிறகு தங்கள் குழந்தைகளை அரவணைத்துக்கொண்டனர். வீடியோவில், சானியா தனது வெற்றியை மகன் இஷான் மிர்சாவுடன் கொண்டாடுவதைக் காணலாம் மற்றும் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தங்கள் இடத்தைப் பதிவு செய்த பிறகு ரோஹன் போபண்ணா தனது மகள் திரிதாவை அழைத்துச் சென்றார்.
சானியாவின் வெற்றியின் சில நிமிடங்களுக்குப் பிறகு, மகன் இஷான் தனது அம்மாவை நோக்கி மைதானத்திற்குள் ஓடி சென்றார். அப்போது சானியா கட்டிப்பிடித்து முத்தமிட்டு வெற்றியை பகிர்ந்துகொண்டார்.
- Ind vs NZ 1st T20I: இந்திய அணியை விசிட் அடித்த தோனி
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 நாளை முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டியானது ராஞ்சியில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாக இருப்பார்.
இதையும் படியுங்கள்:
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் உரையாடி மகிழ்ந்தார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி. தனது சொந்த ஊரில் விளையாட வந்துள்ளது இந்திய வீரர்களுடன் பேசினார். அவர் பேசிய வீடியோவை பிசிசிஐ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Look who came visiting at training today in Ranchi - the great @msdhoni! 😊#TeamIndia | #INDvNZ pic.twitter.com/antqqYisOh
— BCCI (@BCCI) January 26, 2023
- ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேற்றிய ரைபகினா, சபலெங்கா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர். இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ரைபகினா முன்னேறி அசத்தியுள்ளார்.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இதையும் படியுங்கள்:
- அரையிறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி… கிராம்புஷ் சகோதரர்கள் அசத்தல்!
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதிய காலிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறியது. இந்த ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கே வெற்றி என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2-0 என சமநிலை பெற்றது. இதனால் பெனால்டி ஷுட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த பெனால்டி ஷுட்-அவுட்டில் அதிரடி காட்டிய ஜெர்மனி 4-3 என வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்:
முன்னதாக, ஆட்டத்தில் அடுத்தடுத்த கோல் அடித்து கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். மேட்ஸ் மற்றும் டாம் கிராம்புஷ் சகோதரர்கள் மான்செங்லாட்பாக் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே கல்லூரியில் படித்து தற்போது கொலோனில் உள்ள ரோட்-வீஸ் கோல்ன் கிளப்பில் விளையாடுகின்றனர். நாளை நடவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
𝐅𝐮𝐥𝐥-𝐓𝐢𝐦𝐞: 𝐄𝐧𝐠𝐥𝐚𝐧𝐝 𝟐-𝟐 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲 (𝐒𝐎: 𝟑-𝟒)
Germany complete an incredible comeback in the final 2 minutes to snatch the win against England in the shoot-outs to qualify for the semi-finals! #HWC2023
📱- Download the @watchdothockey app for all updates pic.twitter.com/hwQFoaAIjm— International Hockey Federation (@FIH_Hockey) January 25, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.