சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் 0-3 என தொடரை முழுமையாக பறிகொடுத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்பட்டாலும், இந்திய டாப் வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடவில்லை என்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Before home series, selectors wanted top Test cricketers to get match practice at Duleep Trophy, they said no
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சொந்த நாட்டில் நடந்த டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற டாப் வீரர்கள், உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் பங்கேற்று பயிற்சி பெற வேண்டும் என்று தேர்வாளர்கள் விரும்பியதாகவும், ஆனால், டாப் வீரர்கள் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மைதானத்தில் 0-3 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டதற்குப் போதுமான போட்டிப் பயிற்சி இல்லாதது முக்கிய காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "அவர்கள் (இந்திய அணி வீரர்கள்) நிச்சயமாக கொஞ்சம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இது ஒரு நீண்ட இடைவெளி. நாம் வங்கதேச அணியை வென்றோம் என்று எனக்குத் தெரியும், எனவே அது நியூசிலாந்திற்கு எதிராக கேக்வாக் ஆகப் போகிறது என்று எனக்குத் தெரியும்.
ஆனால், நியூசிலாந்து, வெளிப்படையாக, இந்தியாவிலும் ஐ.பி.எல்-லிலும் விளையாடிய கிரிக்கெட் வீரர்களுடன், இந்திய ஆடுகளங்கள் என்ன செய்கின்றன என்பதைப் பற்றிய உணர்வைக் கொண்ட ஒரு சிறந்த தாக்குதலைக் கொண்டிருந்தனர்" என்று அவர் கூறினார்.
பெரும்பாலான மூத்த வீரர்கள் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடவில்லை. அவர்கள் சொந்த மைதானத்தில் நிலைமைகளைக் கையாள்வதிலும், டர்னிங் பந்தை ஆடுவதிலும் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். அவர்களைப் போன்ற வீரர்களுக்கு இது இரண்டாம் பட்சம்.
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் கூட மோசமான தொடரைக் கொண்டிருந்தனர். அவரது கடைசி 10 இன்னிங்ஸ்களில், கோலி 192 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் சர்மா 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி பல வருடங்கள் ஆகியுள்ளது. ரோகித் கடைசியாக ரஞ்சி கோப்பையில் 2015 ஆம் ஆண்டிலும், கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டிலும் ஆடி இருந்தனர்.
ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய டாப் வீரர்களுக்கு ஒரு மாத இடைவெளி இருந்தது. அதாவது, செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 22 வரை பெங்களூரு (ஒரு போட்டி) மற்றும் அனந்தபூரில் நடைபெறும் துலீப் டிராபியில் அனைத்து சிறந்த வீரர்களுக்கும் பங்கேற்கும் தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால், ரோகித்தும், கோலியும் மற்ற முக்கிய வீரர்களுடன் சேர்ந்து ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது. இருப்பினும், சில சிறந்த முன்னணி வீரர்கள் பின்னர் தங்கள் பெயர்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளனர். பிறகு வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் (செப்டம்பரில்) நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
ரோகித் சர்மா, கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் துலீப் டிராபியில் பங்கேற்காததால், உள்நாட்டுப் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜாவை விடுவிக்க தேர்வுக் குழு முடிவு செய்தது.
சுப்மான் கில், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் துலீப் டிராபியில் விளையாடியவர்களில் அடங்குவர்.
இந்த தொடரில் இந்திய வீரர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி அதிகம் ஆராய வேண்டாம் என்றும், ஐந்து டெஸ்ட் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் நடக்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் கவாஸ்கர். இந்தியா தனது கடைசி இரண்டு பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் பயணங்களில் வெற்றியுடன் திரும்பியது.
"நான் அவர்களுக்கு என்ன சொல்வேன் என்றால். நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வியை கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். ஆஸ்திரேலிய தொடருக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். அங்கு சென்று, மூன்றாவது முறையாக தொடரை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் 1-0, 2-0, 2-1 என வெற்றி பெற்றாலும் சரி. அதுதான் இந்திய கிரிக்கெட்டை விரும்பும் பொதுமக்க உயர்த்தும், ”என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“