பும்ரா?... கம்மின்ஸ் முதல் அன்ரிச் நோர்ட்ஜே வரை: சாம்பியன்ஸ் டிராபியை தவற விடும் டாப் வீரர்கள் இவங்கதான்!

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில்  சில நாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வீரர்கள் யார்? ஏன் அவர்களால் பங்கேற்க முடியவில்லை? காரணம் என்ன? என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். 

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில்  சில நாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வீரர்கள் யார்? ஏன் அவர்களால் பங்கேற்க முடியவில்லை? காரணம் என்ன? என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top players to miss ICC Men Champions Trophy 2025 jasprit bumrah pat cummins saim ayub josh hazlewood Tamil News

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில்  சில நாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வீரர்கள் யார்? ஏன் அவர்களால் பங்கேற்க முடியவில்லை? காரணம் என்ன? என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

Advertisment

பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில்  சில நாட்டு அணிகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வீரர்கள் யார்? ஏன் அவர்களால் பங்கேற்க முடியவில்லை? காரணம் என்ன? என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். 

கம்மின்ஸ் 

Advertisment
Advertisements

கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான  பேட் கம்மின்ஸ் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். 

பும்ரா

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முதுகில் காயத்தை எதிர்கொள்வதால் விளையாடுவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. 

ஹேசில்வுட்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடுப்பு காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். 

சைம் அயூப்

கணுக்கால் காயம் காரணமாக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் சைம் அயூப் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். 

ஜெரால்ட் கோட்ஸி

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் ஜெரால்ட் கோட்ஸி, இடுப்பு இறுக்கம் மற்றும் தொடை காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் ஆடவில்லை. 

மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் முதுகு காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடமாட்டார்.

ஜேமி ஸ்மித்

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜேமி ஸ்மித் கால் தசைப் பிடிப்பு காரணமாக  சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளார்.  

அன்ரிச் நோர்ட்ஜே

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடமாட்டார்.

Pat Cummins Jasprit Bumrah Champions Trophy India Vs England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: