ஸ்டோக்ஸ் சேஸிங் கோலி; Ronaldo-ஸ் 30 லீக் கோல் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் நியூஸ்

ஆர்ச்சருக்கு இரண்டாம் கட்ட கொரோனா சோதனையும் நெகட்டிவ். வார்னிங்குடன் 3வது டெஸ்ட் போட்டிக்கு அனுமதி

By: July 21, 2020, 5:16:04 PM

இன்றைய முக்கிய ஸ்போர்ட்ஸ் செய்திகளின் ரவுண்ட் அப் இங்கே,

1.உலகக் கோப்பை டி20 தொடர், இந்தாண்டு நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,

“இப்போது வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை(60 போட்டிகள்) முழுமையாக நடத்த திட்டம் உள்ளது” என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

2. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இங்கிலாந்து அணியிலிருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விதிகளை மீறியதற்காக நீக்கப்பட்டார்.

‘Mr Incredible’ – பென் ஸ்டோக்ஸ் எனும் அரக்கனுக்கு கேப்டன் ரூட் புகழாரம்

இதனையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் 5 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சருக்கு எச்சரிக்கையும் அபராதத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்தது. மேலும் கொரோனா சோதனை செய்தப் பின்பு நெகட்டிவ் என்று வந்தவுடன் ஜூலை 21 ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் பங்கேற்கலாம் என தெரிவித்தது.

இந்நிலையில், ஆர்ச்சருக்கு 2 கட்ட கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு, இரண்டும் நெகட்டிவாக ரிசல்ட் வந்ததால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படுவார் என்று இங்கிலாந்து  அறிவித்துள்ளது.

3. ஊரடங்கு காலத்தில் தேக்கி வைத்திருந்த மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த ஷிகர் தவான். மீண்டும் பயிற்சிக் களத்திற்கு திரும்பிய போது ஷூட் செய்யப்பட்டது.

4. கிறிஸ்டியானோ ரொனால்டோ 2015-16 சீசனுக்கு பிறகு முதல் முறையாக 30 லீக் கோல்களை அடித்துள்ளார்.

5. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் விராட் கோலியை நெருங்குகிறார் பென் ஸ்டோக்ஸ். ஸ்டீவ் ஸ்மித் எப்போதும் டாப்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Top sports news today latest cricket updates ben stokes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X