விளையாட்டு உலகில் இன்றைய முக்கிய அப்டேட் குறித்த ரவுண்ட் அப் இங்கே,
Advertisment
1.ஸ்போர்ட்ஸ் சென்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்தை கன்ஃபியூஷனில் உட்கார வைத்துள்ளது. வீடியோவில் வரும் விளையாட்டை ஒலிம்பிக்கில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாவம், அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு மோடில் நீங்க மாற வேண்டிய நேரம் இதோ,
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தனது 500 டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட். முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, ஆண்டர்சன், மெக்ரத், வால்ஷ் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஸ்டூவர்ட் பிராட் 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
3. 2019 ஐபிஎல் தொடரில், ஒன் மேன் ஆர்மியாக, எதிரணியை கபளீகரம் செய்து, கொல்கத்தா அணியை பல போட்டிகளில் மீட்டெடுத்தவர் ஆந்த்ரே ரஸல். அப்படியிருந்தாலும், தொடரில் இருந்து வெளியேறியது கேகேஆர். அணியின் நிர்வாகம் குறித்தும், தலைமையின் செயல்பாடுகள் குறித்தும் ரஸல் அதிருப்தி வெளியிட, சம்பவம் அப்போது புகைச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இவ்விவகாரம் குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், நாங்கள் இருவரும் விவகாரம் குறித்து தெளிவாக பேசிவிட்டோம். அவர் என் மேல் அதிருப்தி கொள்ளவில்லை. அணியின் தோல்விகள் மீதே அதிருப்தி கொண்டார். அவ்வளவு தான் விஷயம் என்றும் புகைச்சலுக்கு தண்ணீர் தெளித்துள்ளார்.
4. தேதிகள். இடங்கள். பயிற்சி வசதிகள். தனிமைப்படுத்தல் அளவீடுகள். புதிய நடைமுறைகள் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் பிற முக்கிய விவரங்களை இறுதி செய்ய ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு ஆகஸ்ட் 1 ம் தேதி கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், ஆட்டத்தை ரசிகர்கள் தனி நபர் இடைவெளியோடு அமர்ந்து பார்த்து ரசித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news