3 ஸ்பெல்ஸ், 3 யார்க்கர்ஸ், 3 விக்கெட்ஸ் – இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் ரவுண்ட் அப்
விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே, 1.அமெரிக்கன் ஃபுட்பால் அணியின் பிரபல வீரர் எசேக்கியேல் எலியட் எனுபவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மேனேஜர். டோன்ட் வொர்ரி ப்ரோ…. ஆல் ஈஸ் வெல்….…
விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே,
1.அமெரிக்கன் ஃபுட்பால் அணியின் பிரபல வீரர் எசேக்கியேல் எலியட் எனுபவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது வருகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மேனேஜர்.
டோன்ட் வொர்ரி ப்ரோ…. ஆல் ஈஸ் வெல்….
2. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2000ம் ஆண்டு, இதே நாள் (ஜூன் 16) தனது 400வது டெஸ்ட் விக்கெட்டை பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கைப்பற்றினார்.
அண்ணன் லெஜண்டுடா!!
3. இங்கிலாந்தில் பிறக்காத, ஆனால் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வீரர்கள் கொண்டு பெஸ்ட் ஆல்டைம் ஓவர்சீஸ் இங்கிலாந்து XI அணியை அறிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
ஆண்ட்ரூ ஸ்டிராஸ்
டக்ளஸ் ஜார்டின் (c),
ராபின் ஸ்மித்
கெவின் பீட்டர்சன்
ஆலன் லாம்ப்
பென் ஸ்டோக்ஸ்
மேட் பிரயர் (wk)
க்றிஸ் லெவிஸ்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஃபில் டிஃப்ரெய்டஸ்
ஃபில் எட்மன்ட்ஸ்
அடேங்கப்பா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!
4. 3 ஸ்பெல்ஸ், 3 யார்க்கர்ஸ், 3 விக்கெட்ஸ்
21 வருடங்களுக்கு முன்பு, இதே நாள் அக்தரின் புயல் வேக பந்துவீச்சில் நியூசிலாந்து சின்னாபின்னமாக, பாகிஸ்தான் வெற்றிப் பெற்று 1999 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
5. வீரர்களின் டாட்டூ-வை கொண்டு அவர்கள் யார் என கண்டுபிடிக்கச் சொல்லி புதிர் போட்டிருக்கிறது cricbuzz
அடங்கப்பா! கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாரு…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“