’ஓய்வை அறிவிப்பதற்கு இது சரியான நேரமாக இருந்தாலும், எனக்கு கிடைக்கும் அன்பை விட்டு பிரிவது கடினமானது“ என்று டோனி கூறியுள்ளார்.
ஐ.பி.எல் 2023 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது 170 முதல் 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், சென்னை அணியின் பந்து வீச்சு இருந்தது.
தொடக்க வீரர்களாக சகாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹிர்திக் பாண்டிய 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இந்நிலையில் 15 ஓவரில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசி பந்து வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது.
இந்த ஐ.பி.எல் சீசனுடன் தோனி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனாலும் தோனியின் ரசிகரள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றுதான் நினைத்தனர். 5 வது முறையாக சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்த தோனி பேசுகையில் “ இதுதான் எனது ஓய்வை அறிவிக்க சரியான நேரம். ஆனால் எல்லா இடத்திலிருந்து எனக்கு கிடைக்கும் இந்த அன்பை நினைக்கும்போது, என்னால் எளிதாக இதை விட்டி வெளியே செல்ல முடியாது. இதிலிருந்து விலகுவது எளிமையான விஷயம். ஆனால் அடுத்த 9 மாதங்கள் விளையாடி அடுத்த ஐ.பி.எல்-யை சந்திப்பதுதான் கடினம். இது என்சார்பாக நான் கொடுக்கும் அன்பளிப்பு. ஆனால் இதற்கு எனது உடல் ஒத்திழைப்பது கடினம்தான்” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் “ நாம் உணர்ச்சி வசப்பட்டுவிடுவோம். சி.எஸ்.கே-விற்கும் விளையாடிய முதல் ஆட்டத்தில் எனது பெயரை அனைவரும் சத்தமாக உச்சரித்தபோது எனது கண்கள் நிறைந்தது. நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். நான் மிகவும் தன்மையான மனிதன் என்பதை அவர்கள் நேசிக்கிறார்கள். நான் இல்லாத ஒன்றாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
எல்லா கோப்பைகளும் சிறப்பானவைதான், ஆனால் ஐ.பி.எல் பொருத்தவரை, நீங்கள் எல்லா நெருக்கடியான சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்”. என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil