மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: திருச்சி மாணவர்கள் சாதனை
திருச்சி ரைபிள் கிளப் மாணவர் ஆர்.எல்.ஶ்ரீசுதர்சன், 776 மதிப்பெண்கள் பெற்று 9-வது இடத்தை பெற்றார். அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் நடத்திய 2023ம் ஆண்டிற்கான மாநில அளவிலான 48-வது சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் மதுரையில் நடைபெற்றது. இதில் 177 ஓப்பன் சைட் 10எம் ஏர் ரைபிள் சப்-ஜூனியர் பிரிவில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 450 நபர்கள் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் மாணவர் ஆர்.எல்.ஶ்ரீசுதர்சன், 776 மதிப்பெண்கள் பெற்று 9-வது இடத்தை பெற்றார். அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரும், திருச்சி ரைபிள் கிளப் தலைவருமான ந.காமினி கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர் ஆர்.எல்.ஶ்ரீ சுதர்சன் உள்ளிட்டோர்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஆர்.எல்.ஶ்ரீ சுதர்சனை, திருச்சி ரைபிள் கிளப் அட்மின் மற்றும் பயிற்சியாளரான ம.சந்திரமோகன் உள்ளிட்ட பலரும் அடுத்த ஆண்டுக்கான போட்டியில் முதலிடத்தை பெற வேண்டும் என வாழ்த்தி பாராட்டினர்.
இந்த நிகழ்வில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் உள்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி ரைபிள் கிளப் வீரர்கள் 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“