க.சன்முகவடிவேல்
திருச்சி: தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நடைபெற்ற மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள் EM.தர்மராஜ், மணிவேல் ஆகியோரும், விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தென்னரசு செய்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil