உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சியில் 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக் கோப்பையை நிறுவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/7e2cb197-018.jpg)
திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாக ALL THE BEST INDIA என்கிற பேனருடன் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற வாழ்த்தி இந்த 15 அடி பிரம்மாண்ட உலகக் கோப்பையை நிறுவியுள்ளனர். 11 பேர் கொண்ட குழு 11 மணி நேரம் உழைத்து இதை தயாரித்தனர்.
லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் இது மாதிரியான பிரம்மாண்டமான உலகக் கோப்பையை வைத்து வாழ்த்து தெரிவிப்பது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“