Advertisment

யாரு சார் இவரு... ஸ்பை-யா ஹிட்மேனா... கேசுவலாக வந்து வெள்ளி வென்ற துருக்கி வீரர்: இணையத்தை கலக்கும் மீம்ஸ்

துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணை ஒலிம்பிக் தங்கம் வெல்லவில்லை என்றாலும், யூசுப் டிகெக் தனது ஸ்டைலான துப்பாக்கி சுடுதல் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Turkeys Olympic shooter Yusuf Dikec viral memes Tamil News

தனது 5-வது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள துருக்கி துப்பாக்கி சுடுதல் வீரர் யூசுப் டிகெக் பெற்ற முதல் பதக்கம் இதுவாகும்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று புதன்கிழமை துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான தங்கப் பதக்க போட்டியில் நடந்து. மிகவும் அரங்கேறிய இந்தப் போட்டியில் செர்பியாவின் ஜோரானா அருனோவிச் - டாமிர் மைக் இணை துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணையை 16-14 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. 

Advertisment

தோல்வியுற்ற துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதே பிரிவில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே - வோன்ஹோ லீ இணையை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தி இருந்தது. 

வைரல் மீம்ஸ் 

இந்நிலையில், துருக்கியின் செவ்வல் இலைடா தர்ஹான் - யூசுப் டிகெக் இணை ஒலிம்பிக் தங்கம் வெல்லவில்லை என்றாலும், யூசுப் டிகெக் தனது ஸ்டைலான துப்பாக்கி சுடுதல் அனைவரையும் ஈர்த்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் அதிகம் கவனம் பெற்று அவரது தொடர்பான பதிவுகளும், மீம்ஸ்களும் இணையத்தை கலக்கி வருகிறது. 

தனது 5-வது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள துருக்கி துப்பாக்கி சுடுதல் வீரர் யூசுப் டிகெக் பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். 51 வயதான அவர், நேற்றைய போட்டியின் போது, மற்ற வீரர்கள் போல், இலக்கை துல்லியமாக பார்க்க உதவும் லென்ஸ், சத்தம் குறைவாக்க உதவும் ஹெட்போன் போன்ற எந்த உபகரணங்களும் அவர் அணியவில்லை. வழக்கமாக காலையில் நடைபயணம் செல்லும் ஒருவர் போல் கேசுவலாக பேன்ட், டி-ஷர்ட் போட்டுக் கொண்டு தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் களமாடினார். தனது இணையுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

யூசுப் டிகெக் புகைப்படத்தை ஒரு இணையவாசி, "துருக்கி ஸ்பெஷல் லென்ஸ்கள், கண் மூடி அல்லது காது பாதுகாப்பு இல்லாத 51 வயது பை-யை அனுப்பி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது" பதிவிட்டுள்ளார். 

யார் இந்த யூசுப் டிகேக்?

துருக்கியின் கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள கோக்சுன் மாவட்டத்தில் உள்ள தசோலுக் கிராமத்தில் பிறந்த யூசுப் டிகெக் 2011 ஆம் ஆண்டு தனது விளையாட்டு துப்பாக்கி சுடுதல் வாழ்க்கையைத் தொடங்கினார். செய்தி அறிக்கைகளின்படி, துருக்கியின் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவர் 25 மீ சென்டர்-ஃபயர் பிஸ்டல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 2006 இல் சி.ஐ.எஸ்.எம் மிலிட்டரி உலக சாம்பியன்ஷிப்பில் அவர் 597 புள்ளிகளைப் பெற்றார்.

2013 ஆம் ஆண்டில், டிகெக் 25 மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மற்றும் 25 மீ சென்டர்-ஃபயர் பிஸ்டல் போட்டிகளில் இரட்டை தங்கப் பதக்கம் வென்றார். 2024 -ல் அவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Memes Viral Paris 2024 Olympics Tamil Memes Trending Tamil Memes Today
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment