Advertisment

மதியால் இல்லை என்றாலும் மஹியால் முடியும்': சி.எஸ்.கே வெற்றிக்கு குவிந்த வாழ்த்து

சென்னை அணி மற்றும் தோனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Twitter reactions: CSK book 10th IPL final beating GT in Qualifier 1 Tamil News

IPL 2023: Chennai Super Kings book 10th IPL final with dominating win over Gujarat Titans in Qualifier 1 Tamil News

IPL 2023 Qualifier 1, CSK vs GT Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிஃபயர் -1) ஆட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

Advertisment

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 60 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் டெவோன் கான்வே 34 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியின் பேட்டிங் வரிசை தடுமாறியது. அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் ரன்கள் சேர்க்கவும் போராடினர். அதிகபட்சமாக ஷுப்மான் கில் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 42 ரன்களும், ஆல்-ரவுண்டர் ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணியினர் 157 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 10வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பிரபலங்கள் - ரசிகர்கள் வாழ்த்து

இந்நிலையில், குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். அதனால், சென்னை அணி மற்றும் தோனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை அணி வருகிற ஞாயிற்று கிழமை அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் குவாலிஃபயர் -2ல் வெற்றியை ருசிக்கும் அணியுடன் மோதும். நாளை புதன்கிழமை (மே.24ம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Gujarat Titans Ms Dhoni Twitter Response
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment