Advertisment

காமன்வெல்த் போட்டிக்கு சென்ற பாக். வீரர்கள் திடீர் மாயம்… அதிகாரிகள் தீவிர விசாரணை!

Pakistan Boxing Federation (PBF) secretary Nasi Tang confirmed boxers Suleman Baloch and Nazeerullah disappeared Tamil News: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்னர், பர்மிங்காமில் இரண்டு பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Two Pakistani boxers missing in Birmingham after CWG Tamil News

Pakistan Boxing Federation (PBF) secretary Nasir Tang confirmed the news that boxers Suleman Baloch and Nazeerullah disappeared a couple of hours before the team's departure for Islamabad.. (Representative picture)

Two Pakistani boxers missing in Birmingham after CWG Tamil News: 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகரில் நடந்தன. இதில் பங்கேற்பதற்காக சென்ற சுலேமான் பலூச் மற்றும் நசீர் உல்லா ஆகிய 2 குத்து சண்டை வீரர்கள் திடீரென மயமாகியுள்ளனர்.

Advertisment

இந்த வீரர்களும் தங்களது பயிற்சியாளரிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால், அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் திரும்பவில்லை. கடைசியாக அவர்கள் இருவரும் கடந்த செவ்வாய் கிழமை காலை சிற்றுண்டியின்போது, சக வீரர்களை சந்தித்து உள்ளனர். இதன்பின் அவர்கள் காணாமல் போன நிலையில், குத்து சண்டை வீரர்கள் இருவரின் அறையின் பூட்டை உடைத்து, அதிகாரிகள் உள்ளே சென்றனர். ஆனால், அவர்களது உடைமைகள் உள்ளே இருந்துள்ளன. அவர்களை காணவில்லை.

இதுபற்றி இங்கிலாந்து அரசிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் முறையிட்டுள்ளனர். பாகிஸ்தான் ஒலிம்பிக் கூட்டமைப்பும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து வீரர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இன்று நாடு திரும்ப வேண்டிய சூழலில் அவர்கள் காணாமல் போயுள்ளனர். இதனால், அவர்கள் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் குழு நாட்டுக்கு புறப்பட்டது.

முன்னதாக, இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள சென்ற இலங்கை வீரர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 3 பேரை பின்னர் போலீசார் கண்டறிந்தனர். இந்த சூழலில், பாகிஸ்தானை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் 2 பேர் காணாமல் போயுள்ள சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குத்துச்சண்டை வீரர்கள் மயமானது தொடரபாக பேசியுள்ள பாகிஸ்தான் குத்துச்சண்டை சம்மேளனத்தின் (பிபிஎஃப்) செயலாளர் நசீர் டாங், குத்துச்சண்டை வீரர்கள் சுலேமான் பலூச் மற்றும் நசீருல்லா ஆகியோர் இஸ்லாமாபாத்திற்கு அணி புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு காணாமல் போன செய்தியை உறுதிப்படுத்தினர்.

அவர்களின் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பயண ஆவணங்கள், குத்துச்சண்டை அணியுடன் விளையாட்டுக்கு வந்த கூட்டமைப்பு அதிகாரிகளிடம் இன்னும் உள்ளன. வீரர்கள் காணாமல் போனது குறித்து அணி நிர்வாகம் இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்திற்கும் லண்டனில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம்.

காணாமல் போன குத்துச்சண்டை வீரர்களின் ஆவணங்கள் பாகிஸ்தானில் இருந்து பயணிக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி வைக்கப்பட்டுள்ளன." என்று டாங் கூறியுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் (பிஓஏ) குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போன விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் இரண்டு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்ற பாகிஸ்தான் குத்துச்சண்டையில் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை.

நீச்சல் வீரர் மாயம்…

பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தேசிய நீச்சல் வீரரான ஃபைசான் அக்பர் ஹங்கேரியில் நடந்த FINA உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் போது காணாமல் போனார்.

சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க கூட கவலைப்படாத அக்பர், புடாபெஸ்ட்டை அடைந்த சில மணிநேரங்களில் தனது பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களுடன் காணாமல் போனார். ஜூன் மாதம் முதல் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment