Delhi: India’s U19 Women cricket team vice-captain Shweta Sehrawat dances as she receives a grand welcome from her family and friends
ICC U19 Cricket World Cup - Shweta Sehrawat Tamil News: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Advertisment
இந்த எளிய இலக்கை துரத்திய இந்திய இளம் மகளிர் அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இந்த அபார வெற்றியின் மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து, இந்திய யு-19 மகளிர் அணிக்கு பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்களும், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த தொடரை முடித்த கையோடு இந்திய இளம் மகளிர் அணியினர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு குடும்பத்தினரும், பொதுமக்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் சுவேதா ஷெராவத் தனது சொந்த ஊரில் (டெல்லி) வந்திறங்கியதும் அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஜீப் ஒன்றில் அமர வைத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேளதாளங்கள் முழங்க, ஊர்வலம் அழைத்து சென்றனர்.
அப்போது, திடீரென வாகனத்தின் முன்பு அமர்ந்திருந்த சுவேதா கீழிறங்கி ஓடி சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம் ஆடினார். அவருடன் அவரது தோழிகளும், நண்பர்களும் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#WATCH | Delhi: India’s U19 Women cricket team vice-captain Shweta Sehrawat dances as she receives a grand welcome from her family and friends
India won the inaugural edition of the U19 ICC Women's World Cup in South Africa. pic.twitter.com/gZD3mNT0hM