pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில், 4-வது சுற்று போட்டிகள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரில் சென்னையில் உள்ள எஸ்.டி.ஏ.டி மல்டி பர்போஸ் இன்டோர் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு மும்பா vs பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இன்றைய போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 37 புள்ளிகளை பெற்றது. யு மும்பா அணி 39 புள்ளிகளை பெற்றது. இதனையடுத்து யு மும்பா அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பெங்கால் அணியில் அதிகபட்சமாக மனீந்தர் சிங் 11 புள்ளிகளையும், ஹர்ஷ் லாட் 8 புள்ளிகளையும் பெற்றனர். மும்பை அணியில் அமீர் முகமது 8 புள்ளிகளையும், குமன் சிங் 6 புள்ளிகளையும் எடுத்தனர்.
இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் புள்ளிகளைப் பெற கடுமையாக போராடின. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31 புள்ளிகளை பெற்றது. பெங்களூரு அணி 33 புள்ளிகளை பெற்றது. இதனையடுத்து பெங்களூரு அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக பவன் ஷெராவத் 13 புள்ளிகளையும், அஜீத் பவார் 5 புள்ளிகளையும் பெற்றனர். பெங்களூரு அணியில் சுர்ஜித் 7 புள்ளிகளையும், பரத் 6 புள்ளிகளையும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“