Advertisment

புரோ கபடி: பாட்னா முயற்சி வீண்; யு மும்பா த்ரில் வெற்றி; புனேரி பல்டனை வீழ்த்தி ஹரியானா பரபரப்பு வெற்றி

புரோ கபடியில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதியதில், யு மும்பா பரபரப்பு வெற்றி பெற்றது. ஹரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் இடையேயான மற்றொரு ஆட்டத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பரபரப்பு வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
U Mumba vs Patna Pirates and Puneri Paltan vs Haryana match updates Pro Kabaddi League 2023 in tamil

கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் 41-28 என்கிற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்டன் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. 

Pro-kabaddi-league 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்த நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் புனேவில் உள்ள பலேவாடி விளையாட்டு வளாகத்தில் உள்ள பேட்மிண்டன் ஹாலில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.

யு மும்பா vs பாட்னா பைரேட்ஸ் 

நடப்பு சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 1ல் வெற்றி, 2ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் யு மும்பா அணி 11வது இடத்தில் உள்ளது. மறுபுறம், பாட்னா பைரேட்ஸ் 2 ஆட்டங்களில் வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. 

டிசம்பர் 8 அன்று புனேரி பல்டானுக்கு எதிரான போட்டியில் யு மும்பா அணி  32-43 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த சீசனில் இது அவர்களின் இரண்டாவது தோல்வியாகும். இதற்கிடையில், பாட்னா பைரேட்ஸ் டிசம்பர் 12 அன்று நடந்த கடைசி ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸால் 42-60 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடிக்கப்பட்டனர். இந்த தோல்வியில் இருந்து மீள இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள். 

யு மும்பா vs பாட்னா பைரேட்ஸ் நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் யு மும்பா 18 முறை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில் 7 முறை பாட்னா பைரேட்ஸ் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் 10 முறை வெற்றி பெற்று யு மும்பா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிக்கும் இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்தது.

கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் யு மும்பா பாட்னா அணி பைரேட்ஸ் அணியை 36-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

புனேரி பல்டன் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் 

நடப்பு சீசனில் 2 வெற்றிகளுடன் புனேரி பல்டன் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், 2 வெற்றி ஒரு தோல்வி என ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 

டிசம்பர் 8 அன்று யு மும்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பல்டன் 43-32 என்ற கணக்கில் வென்றனர். நடப்பு சீசனில் இது அவர்களின் இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றிக்குப் பிறகு புனேரி பல்டன் இன்றைய போட்டியில் களமாடுகிறது. இதற்கிடையில், டிசம்பர் 10 அன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி.யை 35-33 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இரு அணிகளும் வெற்றி உத்வேகத்தில் களமாடுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது. 

புனேரி பல்டன் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் - நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இதுவரை 12 முறை மோதியுள்ளன. இதில் புனேரி பல்டான் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்தது.

கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் 41-28 என்கிற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்டன் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

யு மும்பா vs பாட்னா பைரேட்ஸ்

10-வது புரோ கபடி லீக் தொடரில் புனேவில் உள்ள பலேவாடி விளயாட்டு வளாகத்தில் உள்ள பேட்மிண்டன் ஹாலில், யு மும்பா மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெள்ளிக்கிழமை (15.12.2023) இரவு 8 மணிக்கு நடைபெற்றது. 

தொடக்கத்தில் இருந்தே யு மும்பா அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், யு மும்பா 41 புள்ளிகள் பெற்றிருந்தபோது, 35 புள்ளிகள் பெற்றிருந்த பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற போராடியது. ஆனால், அதற்குள் ஆட்ட நேரம் முடிவடைந்ததால், அதன் முயற்சி வீணாகிப் போனது. ஆட்ட நேர முடிவில், யு மும்பா அணி 42 புள்ளிகளும் பாட்னா பைரேட்ஸ் அணி 40 புள்ளிகளும் பெற்றிருந்ததால், யு மும்பா அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி; போராடி வீழ்ந்த புனேரி பல்டன்

10-வது புரோ கபடி லீக் தொடரில், புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், ஹர்யானா ஸ்டீலர்ஸ் அணி பரபரப்பு வெற்றி பெற்றது.

10-வது புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் உள்ள பலேவாடி விளையாட்டு வளாகத்தில் உள்ள பேட்மிண்டன் ஹாலில் இன்று (15.12.2023) புனேரி பல்டன் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. 

ஆரம்பத்தில் இருந்தே, புனேரி பல்டன் அணி ஓரிரு புள்ளிகள் முன்னிலையில் இருந்து வந்தாலும், ஹரியானா  அணியும் தொடர்ந்து புள்ளிகள் எண்ணிக்கையில் துரத்தி வந்தது. ஆனால், ஆட்ட நேரம் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது, இரண்டு அணிகளும் புள்ளிகளைப் பெறுவதில் வேகமாகவும் விரைவாகவும் செயல்பட்டன. ஆனாலும், ஆட்ட நேர முடிவில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 44 புள்ளிகளும் புனேரி பல்டன் அண் 39 புள்ளிகளும் பெற்றிருந்தன. இதன் மூலம், ஹரியான ஸ்டீர்லர்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment