/indian-express-tamil/media/media_files/BThJHkwS7aLaZr8tzSes.jpg)
புரோ கபடி லீக் 2023 -24: யு மும்பா vs புனேரி பல்டான் மோதல்
Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு மும்பா - புனேரி பல்டான் அணிகள் மோதுகின்றன.
யு மும்பா vs புனேரி பல்டான்
இந்தப் போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கடுமையாக போராடின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றன. பெருபாலன நேரம் இரு அணிகளிலும் சமனில் இருந்தது. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து இந்தப் போட்டி சமனில் முடிந்தது.
இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்தன. யு மும்பா அணியில் அதிகபட்சமாக கன்மேன் சிங் 15 புள்ளிகளையும் கோகுல கண்ணன் 6 புள்ளிகளையும் பெற்றனர். புனேரி பால்டன் அணியில் அதிகபட்சமாக அஸ்லாம் 8 புள்ளிகளையும் மோகித் 7 புள்ளிகளையும் பெற்றனர்.
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள யு மும்பா அணி 6ல் வெற்றி, 6ல் தோல்வி, ஒரு போட்டியில் டிரா என 37 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேவேளையில், 13 போட்டிகளில் 11ல் வெற்றி, 2ல் தோல்வி என னேரி பல்டன் 57 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜனவரி 20 அன்று தபாங் டெல்லி கே.சி.க்கு எதிரான போட்டியில் 39 - 33 என்ற கணக்கில் யு மும்பா தோல்வியடைந்தனர். மறுபுறம், புனேரி பால்டன் ஜனவரி 21 அன்று தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 34-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
நேருக்கு நேர் சாதனை
பி.கே.எல் வரலாற்றில் யு மும்பா 21 முறை புனேரி பல்டானை எதிர்கொண்டுள்ளது. இதில், யு மும்பா 10 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. புனேரி பால்டன் 9 முறை வெற்றியுடன் திரும்பியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.
யு மும்பா மற்றும் புனேரி பால்டன் இடையேயான முந்தைய போட்டியில் 43-32 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் வெற்றி பெற்றது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.