Advertisment

புரோ கபடி: யு மும்பா - தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டம் டிரா!

புரோ கபடியில் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யு மும்பா - தெலுன்க்கு டைட்டன்ஸ் ஆட்டம் டிராவில் முடிந்தது.

author-image
WebDesk
New Update
U Mumba vs Telugu Titans PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 -24: யு மும்பாவை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

யு மும்பா vs தெலுங்கு டைட்டன்ஸ் 

இந்த தொடரில் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதியது.

நடப்பு சீசனில் இதுவரை விளையாடியுள்ள 21 போட்டிகளில் 6 வெற்றிகள், 13 தோல்விகள், 2 டைகளுடன் யு மும்பா 42 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. அதேசமயம், 2 முறை வெற்றியும், 19 முறை தோல்வியும் அடைந்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. 

ஏற்கனவே இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி விட்ட நிலையில், தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்க நினைப்பார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் யு மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் 17 முறை மோதியுள்ளன. இதில், தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 10 வெற்றிகளுடன், யு மும்பா அணி முன்னிலையில் உள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக யு மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 52-34 என்கிற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றது. 

யு மும்பா - தெலுங்கு டைட்டன்ஸ் ஆட்டம் டிரா

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) இரவு 8 மணிக்கு நடைபெற்ற யு மும்பா - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் புள்ளிகள் குவிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு துரத்தி வந்த நிலையில், ஆட்டநேர முடிவில் யு மும்பா - தெலுங்கு டைட்டன்ஸ் 45 புள்ளிகளை எடுத்திருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது.  

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment