/tamil-ie/media/media_files/uploads/2022/02/u19.jpg)
U19 Worldcup Cricket Final Update : 19-வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், லீக் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி 5-வது முறையாக பட்டம் வெல்லவும், 2வது முறையாக பட்டம் வெல்ல இங்கிலாந்து அணியம் மல்லுக்கட்டுவதால் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாஷ்துல் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றிருந்த தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, மற்றும் உகாண்டா அணிகளை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப்போட்டியில் தொடக்க விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணியை கேப்டன் யாஷ்துல் மற்றும் ரஷித் ஆகியோர் மீட்டுத்தனர். இதில் ரஷித் 94 ரன்களில் அவுட் ஆன நிலையில், யாஷ்துல் சதம் கடந்த 110 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 290 ரன்கள் குவித்த நிலையில், ஆஸ்திரேலியாவை 194 ரன்களில் சுருட்டியது.
இந்த வெற்றியி்ன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 4-வது முறையாக ஜூனியர் உலககோப்பை தொடரில் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் 4முறை (2000, 2008, 2012, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி கடந்த முறை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால்இன்றைய போட்டியில் வென்று 5-வது முறையாக பட்டம் வெல்ல இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் யாஷ்துல், ரகுவன்ஷஷி, ஷேக் அஷீத், ஹர்நூர்சிங் ரஷித் என பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இதில் ரகுவன்ஷஷி 5 போட்டிகளில் 278 ரன்களம், கேப்டன் யாஷ்துல் 121 ரன்களும், குவித்துள்ளனர். பந்துவீச்சில், ரவிக்குமார், ராஜ்வர்த்தன், விக்கி, நிஷாந்த் சிந்து ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் உள்ளதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்ககலாம்.
அதேசமயம், 24 ஆண்டுகளுக்கு (1988-ம் ஆண்டு) 2-வமு முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து அணி லீக் சுற்றில், வங்கதேசம், அமீகரகம், கன்டா ஆகிய அணிகயை வீழ்த்தியதை தொடர்ந்து காலிறுதியில் தென்ஆப்பிரிக்க அணியையும், அரையிறுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை ஜூனியர் உலககோப்பை தொடரில் கடந்த 1998-ம் ஆண்டு ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. தற்போது 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அந்த அணி 24 ஆண்டு ஜூனியர் உலககோப்பை கனவை நனைவாக்க போராடும்.
இரு அணிகளிலும் ஒரே மாதிரியான வீரர்கள் இருக்கின்றனர். இந்திய அணியில் ரகுவன்ஷஷி மற்றும் இங்கிலாந்து அணியில்ஜேக்கப் பெத்தேல் ஆகிய இருவரும் அதிக ஓவர்கள் பேட் செய்தால் ஆட்டத்தின் இறுதி நொடிகளை தங்கள் பக்கம் திருப்பும் அளவுக்கு தாக்குதலை தொடர்ந்து வருகினறனர். அதேபோல் மிடில் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் யாஷ்துல், மற்றும் இங்கிலாந்து அணியின் டாம் பெர்ஸ்ட் ஆகியோர் அசத்தி வருகினறனர். பந்துவீச்சில் இந்தியாவில் ரவிக்குமார் மற்றும் இங்கிலாந்தில் ஜோசுவா பாய்டன் ஆகியார் நம்பிக்கை சேர்க்கின்றனர்.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பேத்தேல், 2 ரன்களிலும், அடுத்து வந்த கேப்டன் டிம் பரிஸ்ட் ரன் கணக்கை தொடங்காமலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேம்ஸ் ரெவ் ஒருமுனையில் போராட, சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் தாமஸ் 27 ரன்களிலும், வில்லியம் லக்ஸ்டன் 4 ரன்களிலும், ஜார்ஜ் பெல் 0, ரஹீன் அகமது, அலக்ஸ் கார்ட்டன் ஆகியோர் தலா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 24.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தத. கடைசி கட்ட விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்துவிடும் என்று நம்பிய ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்களுக்கு 8-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜேம்ஸ் ரெவ் ஜேம்ஸ் சேல்ஸ் ஆகியோர் அணியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அரைசதம் கடந்த ஜேம்ஸ் ரெவ் அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்க, மறுமமுனையில் சேல்ஸ் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் இனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி8-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது சதத்தை நெருங்கிய ஜேம்ஸ் ரெவ் 95 ரன்களில் (112 பந்து 12 பவுண்டரி) ஆட்டமிழந்தார்
அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேம்ஸ் சேல்ஸ் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும், கவுஷல் தம்பே 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 190 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 21 ரன்களுக்கு அவுட் ஆனார். முக்கிய வீரரான அணியின் கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால், அதன் பிறகு களமிறங்கிய இந்திய வீரர்கள் அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்றனர். ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைச்சதம் அடித்தனர். ராஜ்பாவா 35 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பது இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5ஆவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியது.
பரிசு தொகை
ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்களுக்கு 40 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல், அணி ஊழியர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு ரூ25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.