India vs Bangladesh | U19 ICC World Cup: ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 15-வது ஜூனியர் உலகக் கோப்பை போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் உள்ள புளோம்பாண்டீன், போட்செப்ஸ்ட்ரூம், கிம்பெர்லி, ஈஸ்ட் லண்டன், பெனோனி ஆகிய நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற பிப்ரவரி 11ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டி முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. இடைக்கால தடைவிதித்ததைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.
இந்த ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, 'சி' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமிபியா, 'டி' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டியில் இந்தியாவே இதுவரை வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 என்று 5 முறை கோப்பையை வென்று வாகை சூடியுள்ளது. அடுத்து அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் பட்டம் வென்றுள்ளது. இம்முறை சாம்பியன் கோப்பையை வெல்வதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா இடையே கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் இந்த தொடரில் கிடையாது.
இந்தியா - வங்கதேசம் மோதல்
இந்நிலையில், இந்திய அணி தனது முதல் லீக்கில் நாளை சனிக்கிழமை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பஞ்சாப்பை சேர்ந்த உதய் சாஹரன் வழிநடத்துகிறார். சமீபத்தில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட்டில் 112, 74, 50 ரன்கள் வீதம் விளாசிய சாஹரன் சூப்பர் பார்மில் உள்ளார். ஆதர்ஷ் சிங், ஆரவெல்லி அவினாஷ் ராவ், சச்சின் தாஸ், இன்னேஷ் மஹாஜன், பிரியன்ஷூ மொலியா, ருத்ரா பட்டேல், அர்ஷின் குல்கர்னி, முஷீர்கான், முருகன் அபிஷேக், தனுஷ் கவுடா, ராஜ் லிம்பானி, சாமி குமார் பாண்டே, ஆரத்யா சுக்லா, நமன் திவாரி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் போட்டி தொடர்பாகவும், போட்டியை நேரலையில் எப்படி, எங்கு பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி எப்போது நடைபெறும்?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி நாளை சனிக்கிழமை (ஜனவரி 20) நடைபெறுகிறது.
ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி எங்கு நடைபெறும்?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியை இந்தியாவில் நேரடிலையில் டி.வி-யில் பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியை இந்தியாவில் ஆனலையில் நேரலையில் பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியை இந்தியாவில் ஆன்லைனில் நேரலையில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இணையதளம் மற்றும் செயலில் நேரலையில் பார்க்கலாம்.
இந்திய அணி: அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணைகேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
(ரிசர்வ் வீரர்கள்: பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், முகமது அமான்)
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs BAN Live Streaming, U19 World Cup 2024: When and where to watch India vs Bangladesh U19 ICC World Cup game?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“