Udhayanidhi Stalin: சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் கேலோ இந்தியாவின் 6வது பதிப்பின் நிறைவு விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மாநிலத்தில் உள்ள 12,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் விழா பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு படிக்க புத்தகங்களை வழங்குவது போல், இளைஞர்களுக்கு விளையாட்டில் வெற்றிபெற விளையாட்டு உபகரணங்களையும் வழங்குவோம். பதக்கங்களும் பரிசுகளும் வெற்றியாளர்களுக்கானது என்றால், வெற்றி பெறாதவர்களுக்கு, அவர்கள் பெறும் அனுபவமே அவர்களின் பதக்கம். நமது முதலமைச்சரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் உள்ள அரசு, நமது சமூகத்தில் விளையாட்டின் முக்கியத்துவத்தை தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறது.
கேலோ இந்தியா 2023 சர்வதேச அரங்கில் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய பல விளையாட்டு வீரர்களை அடையாளம் காண உதவி இருக்கிறது. கடந்த 13 நாட்களில், நாடு முழுவதிலும் இருந்து 5,400 க்கும் மேற்பட்ட திறமையான விளையாட்டு வீரர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி நமது மாநிலம் பெருமை கொள்கிறது. முதல் இடத்தைப் பிடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்துகிறேன்; இரண்டாமிடம் பெற்ற தமிழகம்; மற்றும் ஹரியானா மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களைக் கொண்டிருந்தது, கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் முதல் 3 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை." என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு கிட்டிலும்100 டி-ஷர்ட், 200 தொப்பிகள் உள்பட 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய இருக்கும். இந்த ஸ்போர்ட்ஸ் கிட்களை தயாரித்து வழங்குவதற்கான ஆன்லைன் டெண்டர் நவம்பர் 21ம் தேதியுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“