Advertisment

புரோ கபடி: உ.பி யோதாஸை பந்தாடிய ஜெய்ப்பூர்; யு மும்பாவை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

37 புள்ளிகள் வித்தியாசத்தில் உ.பி. யோதாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி; 12 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பாவை வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணி

author-image
WebDesk
New Update
UP Yoddhas vs Jaipur Pink Panthers and Bengal Warriors VS U Mumba PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 - 24: உ.பி. யோதாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்; பெங்கால் வாரியர்ஸ் vs யு மும்பா அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. யோதாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.

உ.பி யோதாஸை பந்தாடிய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்

இன்றைய முதல் போட்டியில் உ.பி யோதாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டில் ஜெய்ப்பூர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஜெய்ப்பூர் வீரர்கள் அபாரமாக விளையாடினர். அவர்களை கட்டுபடுத்த முடியாமல் உ.பி.யோதாஸ் வீரர்கள் திணறினர். ஜெய்ப்பூர் வீரர் அர்ஜூன் 20 புள்ளிகளை எடுத்து அசத்தினார். இறுதியில் ஜெய்ப்பூர் அணி 37 புள்ளிகள் வித்தியாசத்தில் உ.பி. யோதாஸை வீழ்த்தியது.

ஜெய்ப்பூர் அணி 67 புள்ளிகளையும், உ.பி யோதாஸ் 30 புள்ளிகளையும் எடுத்தது. ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக அர்ஜூன் 20 புள்ளிகளை எடுத்தார். உ.பி யோதாஸ் அணியில் அதிகபட்சமாக ககன் 10 புள்ளிகளை எடுத்தார்.

யு மும்பாவை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

இன்றைய இரண்டாவது போட்டியில் யு மும்பா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டில் பெங்கால் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. யு மும்பா அணி புள்ளிகளை பெற திணறியது. இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பாவை வீழ்த்தியது.

பெங்கால் அணி 46 புள்ளிகளையும், யு மும்பா 34 புள்ளிகளையும் எடுத்தது. பெங்கால் அணியில் அதிகபட்சமாக மனீந்தர் 10 புள்ளிகளை எடுத்தார். யு மும்பா அணியில் அதிகபட்சமாக சிவம் 11 புள்ளிகளை எடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment