PKL 9 playoffs, Eliminator 2: UP Yoddha Vs Tamil Thalaivas Tamil News: 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் களமாடின. இந்த அணிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. அதன்படி, லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.
இதே போல் 3-வது இடத்தை பெங்களூரு புல்சும் (74 புள்ளி), 4-வது இடத்தை உ.பி. யோத்தாசும் (71 புள்ளி), 5-வது இடத்தை தமிழ் தலைவாசும் (66 புள்ளி), 6-வது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் (63 புள்ளி) பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், இன்று முதல் மும்பையில் தொடங்கும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி
Yaatrigan kripya dhyan dein 👉 U.P. ke Yoddhas ki sawari pahunch chuki hai #vivoProKabaddi ke Playoffs mein 🚚
— U.P. YODDHAS (@UpYoddhas) December 13, 2022
Muqabla Tamil Thalaivas se theek 8:30 baje, 🎯 ▶️ Semi Final 💪#UPvCHE #SaansRokSeenaThok #YoddhasHum #FantasticPanga #GMRGroup #GMRSports pic.twitter.com/lzmNQWHQt6
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: இரு அணிகளின் பலம் – பலவீனம் என்ன?
நடப்பு சீசனில் 71 புள்ளிகளை குவித்த உ.பி யோதாஸ் அணி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த அணியாக பிளேஆஃப்க்கு முன்னேறியது. அதே நேரத்தில், தமிழ் தலைவாஸ் லீக் கட்டத்தின் முடிவில் 66 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், தொடரில் முதல்முறையாக பிளேஆஃப் முன்னேறியுள்ளது. இரு அணிகளிலும் பர்தீப் நர்வால், நரேந்தர், அஜிங்க்யா பவார் மற்றும் ரோஹித் தோமர் போன்ற ரெய்டர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
தமிழ் தலைவாஸ் அணியில் பவன் செஹ்ராவத் இல்லாத நிலையில், நரேந்தர் ஹோஷியார் 21 போட்டிகளில் 220 ரெய்டு புள்ளிகளுடன் தலைவாஸிற்கான ரெய்டிங் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மறுபுறம், பர்தீப் நர்வால் 21 போட்டிகளில் 208 ரெய்டு புள்ளிகளுடன் பிகேஎல்லில் தனது நிலையான ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். இரண்டு நட்சத்திர ரைடர்களும் அதிக ரெய்டு புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த இரு அணிகளிலும் ரெய்டிங் சிறப்பாக இருந்தாலும், டிஃபென்சில் கலவையாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய தொடக்க ஆட்டத்தில் டிஃபென்சில் கலக்கி இருந்தனர். தமிழ் தலைவாஸ் அணியில் சாஹில் குலியா, சாகர், மோஹித், எம் அபிஷேக், அர்பித் சரோஹா மற்றும் ஹிமான்ஷு ஆகியோர் உள்ளனர். உ.பி யோதாசுக்கு நித்தேஷ் குமார், சுமித் மற்றும் ஆஷு சிங் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.
கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி இவ்விரு அணிகள் மோதிய தொடக்க ஆட்டத்தில் உ.பி யோதாஸ் அணி 41-24 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸை வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த புதன்கிழமை (டிசம்பர் 7 ஆம் தேதி) நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் 43-28 என்ற கணக்கில் உ.பி யோதாஸை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.
Are you ready to witness the mania?#UPvCHE | #IdhuNammaTeam | #GiveItAllMachi | #FantasticPanga pic.twitter.com/Y37FhhYKsH
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 13, 2022
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: நேருக்கு நேர்
புரோ கபடி லீக் தொடரில் உ.பி யோதாஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 12 நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில், உ.பி யோதாஸ் 5 முறையும், தமிழ் தலைவாஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன.
நாளை நடைபெறவிருக்கும் எலிமினேட்டருக்கு முன், கடந்த ஐந்து போட்டிகளில், உ.பி யோதாஸ் மூன்று வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில் தமிழ் தலைவாஸுக்கு எதிரான தோல்வியும் அடங்கும். தமிழ் தலைவாஸ் அணி அதன் கடைசி 5 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு முறை தோல்வி மற்றும் ஒரு முறை டை ஆகியுள்ளது.
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: இரு அணிகளின் உத்தேச செவன்ஸ்
உ.பி யோதாஸ்:
நிதேஷ் குமார், ரோஹித் தோமர், குர்தீப், பர்தீப் நர்வால், ஆஷு சிங், சந்தீப் நர்வால், சுமித்
தமிழ் தலைவாஸ்:
சாஹில் குலியா, ஹிமான்ஷு, அஜிங்கி பவார், மோஹித், நரேந்தர், எம் அபிஷேக், அர்பித் சரோஹா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil