2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள அமெரிக்க மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசம் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், அமெரிக்கா (USA) - வங்கதேசம் (Bangladesh) அணிகள் மோதிய முதலாவது டி20 ஆட்டம் ஹூஸ்டனில் உள்ள ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரைசதம் அடித்த டவ்ஹித் ஹ்ரிடோய் 58 ரன்கள் எடுத்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: USA defeats World No 9 Bangladesh in first T20I in massive upset ahead of T20 World Cup
இதனையடுத்து, 154 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய அமெரிக்க அணி 19.3 ஓவரிலே இலக்கை எட்டிப் பிடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை அமெரிக்கா வீழ்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோரி ஆண்டர்சன் (34) - ஹர்மீத் சிங் (33) ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
வருகிற ஜூன் முதல் சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக நடக்கும் டி20 தொடரில் பலம் பொருந்திய வங்கதேசத்தை வீழ்த்தி மிரட்டி வருகிறது அமெரிக்கா.
அமெரிக்க அணி 2021 ஆம் ஆண்டில் அயர்லாந்தை குறிப்பிடத்தக்க வகையில் வீழ்த்தியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஐசிசி முழு உறுப்பினர் நாட்டிற்கு எதிரான டி20 போட்டிகளில் அவர்களின் முதல் வெற்றியாகும்.
வங்கதேச அணிக்கு எதிரான் இரண்டாவது டி20 மே 23 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி டி20 மே 25ம் தேதியும் நடக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“