Advertisment

குஜராத்தில் பிறந்த கேப்டன் : மும்பை வேகப்பந்துவீச்சார் : பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்க அணி வீரர்கள் யார்?

டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அமெரிக்க அணியில் பல கண்ட கிரிக்கெட் வீரர்கள் ஒரு குழுவான இணைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
UAE Cricket

பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடுகிறார் அமெரிக்காவின் சவுரப் நேத்ரால்வாகர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டி20 உலககோப்பை தொடரில் அறிமுக அணியான யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி, பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ள நிலையில், இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியின் கேப்டன் இந்தியாவை சேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியில் விளையாடியவர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Gujarat-born captain, former Mumbai pacer, Barbadian flair and the Canadian touch: Stars behind USA’s T20 World Cup win over Pakistan

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், ஐசிசி, மற்ற அனைத்து அசோசியேட் நாடுகளுடன் முறையான டி20 அந்தஸ்தை வழங்கியது. அன்றில் இருந்து 30 போட்டிகளில் விளையாடியுள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆண்கள் கிரிக்கெட் அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியுடன் மோதிய யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரில் பெற்ற இரண்டு வெற்றிகள் அந்த அணிக்கு மறக்க முடியாத பரிசாக அமைந்த நிலையில், டி20 உலககோப்பை தொடருக்கான பயிற்சியாகவும் அமைந்தது. உலகக் கோப்பை விளையாடிய முன் அனுபவமும் இல்லாவிட்டாலும், கனடாவுக்கு எதிராக முதல்போட்டியில் 194 ரன்கள் சேஸ் செய்து அசத்தியது. இது டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை இல்லாத மூன்றாவது அதிகபட்சமாகும்.

தொடர்ந்து நேற்று (ஜூன் 6) 2009-ம் ஆண்டு சாம்பியனும், கடந்த உலககோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியுமான பாகிஸ்தான் அணியுடன் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 160 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. நடப்பு உலககோப்பை தொடரில் 2-வது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது. இதில் முதலில் பேட் செய்த யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்தது. இதில் பாகிஸ்தான் அணி வைடு மூலமாகவே 4 ரன்களை விட்டுக்கொடுத்தது. தொடர்ந்து 19 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 5 ரன்கள் வித்தியாசத்தில் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2-வது வெற்றி பெற்ற யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி அடுத்து இந்தியா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த இரு போட்டிகளிலுமே பாகிஸ்தான் பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பல கலாச்சார ஒருங்கிணைப்பு

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றயை பெற்றுள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய ஓட்டத்தைக் கண்ட பல கலாச்சார மற்றும் பல கண்ட கிரிக்கெட் வீரர்களை தனது அணியில் சேர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தவர் கோரி அண்டர்சன். இவர் தற்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்திய யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சில முக்கிய வீரர்களை பார்ப்போம்.

மோனாங்க் படேல்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்த மோனாங்க், ஜூனியர் அளவில் தனது இந்தியாவின் மாநில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர், அமெரிக்கா நாட்டிற்கு குடிபெயர்ந்து, அவர் அமெரிக்க கிரிக்கெட் அணியின் இடம்பெற வேண்டும் என்ற கனவுகளுக்காக தீவிர முயற்சி செய்துள்ளார். 31 வயதான அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அணியின் கேப்டனாக இருக்கிறார். அதற்கு முன்பு 2018 முதல் தொடர்ச்சியாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பல்வேறு தகுதிப் போட்டிகளில் அமெரிக்க அணிக்காக களமிறங்கியுள்ளார்.

ஜோஸ் பட்லர் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோரின் சிறந்த சர்வதேச வீரர்களின் போக்கை பின்பற்றி, பேட்டிங் திறனை வளர்த்தக்கொண்டு, ஒரு முக்கிய விக்கெட் கீப்பர்-கேப்டனாக மோனாங்க் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அவர், 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அரை சதம் அடித்தார்.

சௌரப் நேத்ரவல்கர்

இடது கை வேகப்பந்து வீச்சாளரான நேத்ரவல்கர் மும்பையில் பிறந்தவர். கடந்த 2010 அண்டர்-19 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய காலிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு அவரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் நேத்ராவல்கர் நேற்று போட்டியிலும் சூப்பர் ஓவரிலும் பாகிஸ்தானை சிறப்பாக கையாண்டார். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள். மற்றும் சூப்பர் ஒவரில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

2016 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களான ஆரக்கிளில் ஒரு தொழில்நுட்ப ஊழியராக உள்ள இவர், இதற்கு முன்பு இந்தியாவில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த  2019 அமெரிக்கா அணிக்காகஅறிமுகமானார். அவர் 73 ஒருநாள் போட்டி மற்றும் 29 டி20 போட்டிகளில் 77  விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

நோஸ்துஷ் கென்ஜிகே

இடது கை சுழற்பந்து வீச்சாளர் கென்ஜிஜ் டி20 உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் மிடில் ஆர்டரில் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தினார். 33 வயதான, தென்கிழக்கு அமெரிக்க மாநிலமான அலபாமாவில் பிறந்தார், 1992 இல் தனது குடும்பத்துடன் பூர்விகமான இந்தியாவுக்கு திரும்பினார். கென்ஜிஜ் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை கர்நாடகாவில் முடித்தார், அங்கு அவர் பல்கலைக்கழக அளவில் கிரிக்கெட்டில் இடம்பெற்றார். 2015 இல் அமெரிக்காவிற்குத் திரும்பிய அவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க தேசிய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஆண்ட்ரிஸ் கௌஸ்

தான் டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இரண்டு மாதங்களில்  எட்டு இன்னிங்ஸ்களுக்குள்,  4 பிரபலமான வெற்றிகளின் ஒரு பகுதியாக இருந்தவர் ஆண்ட்ரீஸ் கௌஸ். இதில் 3 போட்டிகளில் அரைசதங்களை அடித்துள்ளார். டி20 உலககோப்பை தொடரில் கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் முதல் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த பிறந்த இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது இடத்தில் களமிறங்கி 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 2011-2020க்கு இடையில் ஃப்ரீ ஸ்டேட்டக்காக விளையாடிய தென்னாப்பிரிக்க முதல்-தர வீரர் ஆவார். 2021 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்காவுடன் மூன்று வருட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அறிமுக போட்டிக்கான காத்திருக்க வேண்டிய நிலை தான் இருந்தது.

நிதீஷ் குமார்

கண்டங்கள் மற்றும் நாடுகளை கடந்து நிற்கிறது நித்தீஷ் குமார் புகழ். கனடாவின் ஒன்டாரியோவில் இந்திய வம்சாவளி பெற்றோருக்குப் பிறந்த நிதிஷ், 2011 உலகக் கோப்பை, ​​போட்டிகளில் பங்கேற்ற இளம் வீரர் (16 வயது, 283 நாட்கள்) என தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். நிதிஷ்  2012 இல் தனது டி20 போட்டிகளில் அறிமுகமானார். 2019 வரை 18 டி20 போட்டிகளில் விளையாடினார். இருப்பினும், கனடாவில் ஏற்பட்ட கடுமையான கொரோனா பாதிப்பு காரணமாக நித்தீஷ் அமெரிக்காவுக்கு சென்று தனது கிரிக்கெட் பயணத்தை தொடர வேண்டிஇருநதது. ஒரு எளிமையான லோயர்-ஆர்டர் பேட் மற்றும் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளரான நிதிஷ், பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், பாக்கிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஆட்டத்தை சமநிலையில் முடிக்க உதவி செய்தார்.

ஸ்டீவன் டெய்லர்

அமெரிக்காவின் முன்னணி உள்நாட்டு கிரிக்கெட் திறமைகளில் ஒருவரான ஸ்டீவன் டெய்லரால் டல்லாஸ் பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஒரு சிறந்த கேட்ச் மூலம் பாக்கிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். 2007 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான மோதலில் பெர்முடாவின் டுவைன் லெவரோக் எடுத்த உலகக் கோப்பை கேட்சை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், டெய்லர் தனது வலதுபுறம் முழுவதுமாக டைவிங், அடித்து பாகிஸ்தான் அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வானைப் வெளியேற்றி அசத்தினார்.

ஆரோன் ஜோன்ஸ்

கனடாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் எடுத்த ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவின் பேட்டிங் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். நியூயார்க்கின் குயின்ஸில் பார்பேடியன் பெற்றோருக்குப் பிறந்த ஜோன்ஸ், தனது ஆரம்ப நாட்களை கரீபியனில் தனது கைவினைப்பொருளை தயாரிக்கும் பணியில் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரு சிக்சர் இரு பவுண்டரியுடன் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியில் முன்னாள் இந்திய அண்டர் 19 ஆல்ரவுண்டர் ஹர்மீத் சிங், பஞ்சாப்பில் பிறந்த சீமர் ஜஸ்தீப் சிங் மற்றும் பாகிஸ்தானில் பிறந்த சீமர் அலி கான் ஆகியோர் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cricket Update T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment