6 மில்லியன் டாலர் நஷ்டம்... கண்டுகொள்ளாத ஜமைக்கா அரசு: உசைன் போல்ட் வக்கீல் பரபர குற்றச்சாட்டு

உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் லிண்டன் கார்டன், ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) நிறுவனத்துடன் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை இழந்ததற்கு போல்ட் மீது குற்றம் சாட்டுவதற்கான முயற்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Usain Bolt lawyer accuses Jamaican govt of negligence in 6 million dollar loss Tamil News

உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் லிண்டன் கார்டன் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பில் ஜமைக்கா அரசு அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தடகள உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டியில் ஒரு பிரிவில் தங்கம் (100 மீ, 2008, 2012, 2016) வென்றவர் என்கிற சாதனையை படைத்துள்ளார். பதினொரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் மற்றும்  100 மீ மற்றும் 200 மீ என இரண்டு போட்டியிலும் மூன்று பட்டங்களை வென்ற முதல் தடகள வீரர் ஆவார்.

Advertisment

100 மீட்டர் தூரத்தை இவர் 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. அது தற்போது வரை முறியடிக்கப்படவில்லை. அத்துடன், அதிவேக தடகள வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் அவரே பிடித்த்துள்ளார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போல்ட் 9.63 வினாடிகளில் 100 மீ தூரத்தை கடந்து சாதனை படைத்தார். இப்படி ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார் உசைன் போல்ட். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Usain Bolt’s lawyer accuses Jamaican govt of negligence in sprint legend’s $6m loss

இந்நிலையில், உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் லிண்டன் கார்டன், ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) உடன் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  முதலீட்டை இழந்ததற்கு போல்ட் மீது குற்றம் சாட்டுவதற்கான முயற்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும்,  6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பில் ஜமைக்கா அரசு அலட்சியம் காட்டியதாக உசைன் போல்ட்டின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.  

Advertisment
Advertisements

இது தொடர்பாக உசைன் போல்ட் வழக்கறிஞர் லிண்டன் கார்டன் தனது  அறிக்கையில், "உசைன் போல்ட்டின் இழப்புக்கு அவர் மீது பழியை சுமத்துவதற்கான முயற்சி இப்போது இருப்பதாக தோன்றுகிறது. அவர் தான் விரும்பும் மற்றும் நேசிக்கும் நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாத குற்றவாளியாக இருக்கிறார். 

இது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டுவதற்கான வழக்கு. மேலும் இது பொதுமக்களையும் ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.எல்) -ஆல் ஏமாற்றப்பட்டவர்களையும் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்தை விடுவிக்கும் முயற்சியாகத் தோன்றுகிறது.

அதிலும் பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்குவதற்கான வெளிப்படையான முயற்சி. இந்த பெரிய அளவிலான மோசடிக்கு உண்மையாக யார் பொறுப்பு என்பது பற்றிய விவரத்தைக் கையாள்வது, நூற்றுக்கணக்கான ஜமைக்கா மக்களை அவர்கள் கடினமாக சம்பாதித்த பணம் மற்றும் மீட்புக்கான தெளிவான பாதையின்றி விட்டுவிட்டது.

ஜமைக்கா அரசு நாட்டை உலுக்கிய பரவலான நிதி மோசடிக்கு எதிராக முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவில்லை. ஸ்டாக்ஸ் அண்ட்  செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட உசைன் போல்ட்டின் அனைத்து நிதிகளும் நிறுவனத்தால் பெறப்படவில்லை என்று பகிரங்கமாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் முற்றிலும் நம்பகத்தன்மையற்றவை.  

போல்ட்டின் நிறுவனத்தால்  ஸ்டாக்ஸ் அண்ட்  செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து நிதிகளும் வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மாற்றப்பட்டன. மேலும் ஒவ்வொரு கட்டணமும் நிறுவனத்தால் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. 

நிதிச் சேவைகள் ஆணையம் (எப்.எஸ்.சி) நியமித்த தற்காலிக மேலாளர் கென் டாம்லின்சன், கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அதில் அவர் போல்ட்டின் 6.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு ஸ்டாக்ஸ் அண்ட்  செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் கணக்கில் இருந்து மோசடியாக அகற்றப்பட்டதாக உறுதி செய்யப்பட்டதாக சாட்சியம் அளித்தார். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை அவரது கணக்கு அறிக்கைகள் மொத்தம் 12.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைக் காட்டியதாக போல்ட் கூறினார்.இந்த டெபாசிட்களைச் செய்வதில் போல்ட் அலட்சியமாக இருந்தார் என்ற கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. 

ஜமைக்காவின் பிரதம மந்திரி, ஜமைக்கா அரசாங்கம் மற்றும் நூற்றுக்கணக்கான ஜமைக்கா குடிமக்கள்  ஸ்டாக்ஸ் அண்ட்  செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. போல்ட் கவனக்குறைவாக இருந்தார் அல்லது சரியான நிதி மேலாண்மை இல்லாதவர் என்று கூறுவது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஒவ்வொரு ஜமைக்காவைப் பற்றியும் அதையே குறிக்கிறது." என்றும் அவர் அதில் கூறினார். 

இந்த வார தொடக்கத்தில், பிரபல போட்காஸ்ட் 'தி பிக்ஸ்-சில் (The Fix) பேசிய போல்ட் விசாரணையின் மந்தமான வேகம் குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். "நான் விரக்திக்கு அப்பாற்பட்டேன்" என்று போல்ட் கூறினார். "எனது பணத்தை திரும்பப் பெறுவதற்கு அரசாங்கம் எனக்கு மேலும் உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் கூறியிருந்தார். 

scam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: