WCL 2024 final: சனிக்கிழமையன்று பர்மிங்காமில் நடந்த 2024 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தித்திப்பான வெற்றியை ருசித்தது. இந்திய சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையேயான இந்தப் போட்டியில், பாகிஸ்தான் மூத்த வீரர் மிஸ்பா-உல்-ஹக் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார்.
15 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஓய்வு பெற வேணடிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ராபின் உத்தப்பா, மிஸ்பாவுக்கு உதவினார். பாகிஸ்தான் இன்னிங்ஸின் 17வது ஓவரில் மிஸ்பாவின் காலில் காயம் ஏற்பட்டு அவர் வலியில் துடித்தார்.
அந்நேரம், உத்தப்பா தனது விக்கெட் கீப்பிங் கடமைகளை விட்டுவிட்டு மிஸ்பாவுக்கு உதவினார், அவருக்கு களத்திற்கு வெளியே செல்ல உதவினார். WCL 2024 இறுதிப் போட்டியில், சேஸிங் அணிக்கு சாதகமாக இருக்கும் இடத்தில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது.
ஷோயப் மாலிக் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்காக அதிகபட்சமாக 36 பந்தில் 41 ரன் எடுத்தார். சோஹைல் தன்வீர் 9 பந்தில் 19 ரன்களை எடுத்தார். அந்த அணி 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் குவித்தது. இந்திய சம்பியன்ஸ் சார்பில் அனுரீத் சிங் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையில், இர்பான் பதான், பவன் நேகி, வினய் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பதிலுக்கு, அம்பதி ராயுடு தனது விறுவிறுப்பான அரை சதத்தின் மூலம் வெற்றிக்கு அடித்தளமிட்டார். யூசுப் பதான் ஒரு ஆக்ரோஷமான கேமியோவை செதுக்க, இந்தியா ஐந்து பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை துரத்த உதவினார்.
பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான குரூப்-ஸ்டேஜ் மோதலில் இந்தியா சாம்பியன்கள் தங்கள் தோல்விக்கு பழிவாங்கவும் இந்த வெற்றி உதவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“