International-chess-fedration: பிரிட்டனின் ஐல் ஆஃப் மேனில் ஃபிடே (FIDE) கிராண்ட் ஸ்விஸ் செஸ் நடைபெற்றது. இதன் ஓபன் பிரிவில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தி 8.5/11 என்கிற புள்ளிகள் கணக்கில் அலெக்சாண்டர் ப்ரெட்கேவை சாம்பியன் பட்டத்தை வென்றார். இதேபோல், மகளிர் பிரிவில் களமாடிய இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிச் சுற்றில் வைஷாலி மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் மோதிய நிலையில், போட்டி டிராவில் முடிவுற்றது. எனினும் இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார். இந்த அசத்தல் வெற்றிகள் மூலம், அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட இருவரும் தேர்வாகி உள்ளார்கள்.
ஏற்கனவே ஆண்கள் பிரிவில் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் தமிழக வீராங்கனை வைஷாலியின் சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகிய நிலையில் தற்போது வைஷாலியும் மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ளார்.
“இந்தப் போட்டி எனது வாழ்க்கையில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்; இது ஒரு அனுபவம்!" என்று வைஷாலி கூறினார்.
தனது அக்காவின் வெற்றி குறித்து பிரக்ஞானந்தா பேசுகையில், "விளையாட்டுக்கு முன்பே, நான் ஒரு கொண்டாட்ட மனநிலையில் இருந்தேன்! அவர் (வைஷாலி) இருக்க வேண்டிய இடத்தை இப்போது அடைந்துள்ளதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல முடிவுகள் வருவதைக் கண்டும் நான் மகிழ்ச்சியடைகிறேன்!” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“