Advertisment

'நம்பாதீங்க, எல்லாம் வதந்தி; யாரோ என்னை ஓரங்கட்ட பாக்குறாங்க': வருண் சக்ரவர்த்தி குற்றச்சாட்டு

தன்னை இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டி வைப்பதற்காக தனது உடற்தகுதி பற்றிய வதந்திகள் பரப்பப்பட்டதாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Varun Chakravarthy alleges someone spread fake injury news to sideline him Tamil News

தொடர்ந்து இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Indian Cricket Team | Varun Chakravarthy: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி. இவர் 2020 மற்றும் 2021 சீசனில் ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். 2020 இல் 17 விக்கெட்டுகளையும், அடுத்த சீசனில் 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 

Advertisment

இதன் காரணமாக அவர் 2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த தொடரில் ஐ.பி.எல்-ல்லை போல வருண் சக்ரவர்த்தியால் பெரிதும் சோபிக்க முடிவில்லை. மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு  விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. அதனால், 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில், 32 வயதான தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தான் ஒரு சில வாரங்களில் காயத்திலிருந்து மீண்டு வந்ததாகவும், ஆனால் தொடர்ந்து இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாகவும், தன்னை இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டி வைப்பதற்காக தனது உடற்தகுதி பற்றிய வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வருண் சக்ரவர்த்தி பேசுகையில், "அது மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் நான் உலகக் கோப்பையை முடித்த உடனேயே, அது ஒரு பெரிய காயம் அல்ல; அது ஒரு சிறிய காயம். நான் மீண்டும் திரும்ப இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆனது. ஆனால் அதன் பிறகு, நான் ஓரங்கட்டப்பட்டேன். மேலும் நான் காயமடைந்தேன் என்று சிலர் அதே சாக்குப்போக்கு கூறினர். ஆனால் மறுபுறம், நான் அவ்வளவு பெரிய காயமடையவில்லை. இது வெறும் வதந்தியா அல்லது என்னைப் பற்றி யாரோ ஒருவர் இந்தச் செய்தியைப் பரப்ப விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் அவர்கள் என்னை ஓரங்கட்டிவிடுவார்கள். ஆனால் வாழ்க்கை அப்படித்தான்; அது நியாயமற்றது. இது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. 

ஐபிஎல் 2022 எனக்கு சிறந்த சீசன் அல்ல, ஏனென்றால் உலகக் கோப்பைக்குப் பிறகு 2021 இல் என்ன நடந்தது என்பது எனக்குள் நுழைந்தது, மேலும் நான் இந்திய அணியில் திரும்புவதற்கு மிகவும் ஆசைப்பட்டேன். எனவே அனைவருக்கும் நிரூபிக்க விரும்பினேன். நான் மிகவும் அவநம்பிக்கையுடன் இருந்தேன். நான் எனது பந்துவீச்சில் பல விஷயங்களை மாற்றத் தொடங்கினேன், இது இறுதியாக எனது மன அமைதியைப் பாதித்தது, மேலும் எனது சாதாரண பந்துவீச்சையும் என்னால் செய்ய முடியவில்லை. அதனால் ஐபிஎல் எனக்கு மோசமாக இருந்தது.

நான் ஓய்வு எடுத்தேன், எனக்குள் என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். இப்போது, ​​எல்லாம் கூலாக இருக்கிறது; நான் இனி விரக்தியடைய போவதில்லை. விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். சிறந்தவர்களில் சிறந்தவர் கூட - அந்த நபரை ஓரங்கட்டப் போகிறார்கள் என்று செய்தி வருகிறது, அப்படியானால் நான் யார்? எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் வழியில் எது வந்தாலும் பார்ப்போம் என உள்ளேன். என்னால் முடிந்ததைச் செய்வேன்." என்று அவர் கூறியுள்ளார். 

வருண் சக்ரவர்த்தி ஐ.பி.எல் 2022 சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். ஆனால், 2023 தொடரில் சிறந்த கம்பேக்கை கொடுத்த அவர் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனால் அவரை ஐ.பி.எல் 2024 தொடருக்காக ரூ.14 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team Varun Chakravarthy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment