டி20 உலகக் கோப்பை முதல் சாம்பியன்ஸ் டிராபி வரை: ஒரே மைதானத்தில் வருண் சக்ரவர்த்தி வீழ்ச்சியும் எழுச்சியும்!

நவம்பர் 2021 இல் நடந்த உலககோப்பை தொடரில், ஏமாற்றமளிக்கும் விதமாக ஆடிய வருண் சக்ரவர்த்தி, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

author-image
WebDesk
New Update
Varun Chakravarthy

சாம்பியன் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பல மாத இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இதை க்ளிக் செய்யவும்: From T20 World Cup to ICC Champions Trophy – Varun Chakravarthy’s career comes full circle at the same venue

கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் வெளியேறிய பிறகு, வருண் சக்கரவர்த்தி அக்டோபர் 2024 வரை இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு, நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரன போட்டியில் மீண்டும் களமிறங்கிய, இவர், பதட்டமாக காணப்பட்டார். ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய வலுவான ஆட்டத்தால், இந்தியாவின் டி20 அணியில் தனது இடத்தை உறுதி செய்திருந்தாலும்,ஒருநாள் போட்டிகளில் அவர் இடம்பெற, அதே மர்மத்தைத் தக்க வைத்துக் கொள்வார? பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை அடித்து ஆடுவார்களா? அல்லது வருண் தனது வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன

அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில், வருண் சிறப்பாக செயல்பட்ட நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற ஒரு பேட்டிங் திறமையாளரை இழந்த அணியில் அவர் சேர்க்கப்பட்டது சரியான தேர்வு தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தற்காலிக இந்திய அணியைத் தேர்வு செய்ய தேர்வுக்குழு கூடியபோது, வருணைச் சேர்க்கலாமா வேண்டாமா என்று யோசித்தனர்.

Advertisment
Advertisements

டி20 போட்டிகளில் வருண் தனது சிறப்பான பந்துவீச்சை நிரூபிக்கும் விதமாக, விஜய் ஹசாரே டிராபியில் தான் ஒரு குறுகிய வடிவ பந்து வீச்சாளர் மட்டுமல்ல என்பதைக் காட்டினார். ஆனால் ஒருநாள் போட்டியில், குறிப்பாக  ஐசிசி போட்டியில் ஒரு அனுபவமற்ற சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது ஒரு பலவீனமாகவே பார்க்கப்பட்டது. இருப்பினும், வருண் டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு தொல்லையாக இருந்தாலும்,, குல்தீப் யாதவ் இருந்ததால், வருணுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

தேசிய அணிக்கு அவர் மீண்டும் வருவது ஒரு கனவு ஓட்டத்திற்குக் குறையாதது அல்ல, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு திரைப்பட இயக்குனராக தீவிரமாக முயற்சித்தபோது ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட்டில் எழுதுவதை அவர் கூட கற்பனை செய்திருக்க மாட்டார். ஆனால் அவரது வாழ்க்கையும் அவரது பந்துகளை விட கூர்மையான திருப்பங்களை எடுத்துள்ளன, அவை பேட்ஸ்மேன்களால் புரிந்துகொள்ள கடினமான ஒரு விசித்திரமாக உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில், வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டபோது,  எப்போது, யாருக்கு யாருக்காக அவரை வெளியேற்றுவார்கள் என்பதுதான் ஒரே கேள்வியாக இருந்தது. அந்த தருணம் இறுதியாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு மோசமான போட்டியில் வந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அவரது பந்துவீச்சை அடித்ததுபோல், இல்லாமல், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு வருண் தன்னை சவால் நிறைந்த வீரராக திறமையை நிரூபிக்கும் வகையில், அசத்தினார். அவரது திறமையால் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், நாளை நடைபெறும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக தனது வேகப்பந்துவீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க உதவியது.

சாம்பியன் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் இந்திய அணிக்கு இறுதியாக ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது, நான்கு முனை சுழற்பந்து வீச்சாளர் தாக்குதல் அனைத்து வகையான சிக்கல்களையும் ஏற்படுத்தியதால், நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடுவதா அல்லது மூன்று-இரண்டு காம்போவுக்குத் திரும்புவதா, அப்படியானால், யாரை விட்டுவிடுவது? வருணை நீக்குவதா சேர்ப்பதா என ரோஹித்தும் கம்பீரும் நேற்று (மார்ச் 02) இரவு ஒரு முக்கியமான கேள்வியுடன் தூங்கச் சென்றிருப்பார்கள்.

வருணைப் பொறுத்தவரை, அவர் வீசிய முதல் பந்திலேயே, அவர் ஒரு பவுண்டரியை விட்டுக்கொடுத்தார், இதனால் சற்று பதட்டமாகத் காணப்பட்ட அவர், “என்னுடைய முதல் ஸ்பெல்லில், நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன், ஏனென்றால் முந்தைய விஷயங்கள், உணர்ச்சிகள் மற்றும் இந்த மைதானத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அனைத்தும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. நான் அதை அடக்கி, கட்டுப்படுத்த முயற்சித்தேன். விராட் கோலி, ரோஹித் மற்றும் ஹர்திக்பாண்டியா  கூட, 'அமைதியாக இரு, அமைதியாக இரு' என்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் வந்து என்னிடம் பேசினார்கள். அவர்கள் பேசியது எனக்கு பெரிதும் உதவியது என்று கூறியுள்ளார்.

வில் யங்கின் விக்கெட்டையும் உள்ளடக்கிய முதல் ஸ்பெல் எந்த வகையிலும் அவரது சிறந்த பந்து வீச்சாக இல்லை, ஆனால் அவர் 5-0-16-1 என்ற புள்ளிவிவரங்களைக் கொண்டிருந்தார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை அடித்து நெறுக்க முயற்சித்திருந்தாலும், அவர் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இருந்தது, ஆனால் சூழ்நிலைகளைத் தவிர, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், மறுமுனையில் அழுத்தத்தைக் குவிக்க அவருக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அதுவே வருணுக்கு உதவியது, அவர்களால் உருவாக்கப்பட்ட அழுத்தத்தைத் தாங்க வருணுக்கு போதுமான ஆயுதம் இருந்தது.

டி20களில், இரவில் அவர் வீச வேண்டிய பந்துகளின் வரிசையை வருண் முழுவதுமாக அறிந்திருந்தார். முடிந்தவரை முழுவதுமாக கவனமாக இருந்து ஒருநாள் போட்டிகளில், விக்கெட் எடுக்கும் பந்துகளை சரியான விகிதத்தில் வீசினால் வெற்றி கிடைக்குமா என்பது குறித்து சோதனை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. விஜய் ஹசாரே டிராபியில் விளையாடியது அவருக்கு பெரிய அளவில் உதவியது.

நான் பந்துகளை ஒரு ஓவரை எப்படி உருவாக்குவது என்பது, 50 ஓவர் வடிவத்துடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டது. கடந்த இரண்டு வருடங்களாக விஜய் ஹசாரேவில் விளையாடியபோது அதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. உள்வரும் பந்து அல்லது வெளிச்செல்லும் பந்து அல்லது நேரான பந்து அல்லது மேல் சுழல், எதுவாக இருந்தாலும், எப்போது பந்து வீச முடியும் என்பதைப் புரிந்துகொள்ள இது எனக்கு உதவியது. எப்போது என்ன பந்து வீச வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை எனக்கு அளித்தது, இது டி20களில் நான் செய்வதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று வருண் கூறியுள்ளார்.

இரண்டாவது ஸ்பெல்லில், வருண் பந்து வீச வந்தபோது, தேவையான விகிதம் ஒரு பந்திற்கு ஒரு ரன்னுக்கு மேல் இருந்தது. இது ஆபத்தானதாக இருக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் அதை இரண்டு கைகளாலும் பிடித்து, தொடர்ச்சியான ஓவர்களில் கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் விக்கெட்டுகளை வீழ்த்தி, மிட்செல் சாண்டர் மற்றும் மேட் ஹென்றி ஆகியோரை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார். இது ஒரு பொறுமையான விளையாட்டு. நீங்கள் காத்திருக்க வேண்டும் - இவ்வளவு மெதுவான விக்கெட்டுகளில், பந்து வேகமாகத் திரும்பாது. இது உங்கள் நாளாக இருந்தால் அது உங்களுக்கும் நடக்கும், ”என்று வருண் மேலும் கூறியுள்ளார்.

Varun Chakravarthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: