இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவிடம் 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை வங்கதேசம் பறிகொடுத்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வருண் கம்பேக் கொடுத்தது எப்படி?
இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் தனது சிறப்பான சுழல் வித்தையை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில், வருண் சக்ரவர்த்தி தனது சமீபத்திய வெற்றியின் ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
"இந்திய அணிக்காக ஆடி 3 வருடங்கள் ஆகிவிட்டன, அணி அறிவிக்கப்படும் போதெல்லாம், என் பெயர் ஏன் இல்லை என்று நான் உணர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து நான் மீண்டும் மீண்டும் வர முயற்சிக்க வேண்டும் என ஊக்கம் எனக்கு கிடைத்தது. நான் நிறைய உள்நாட்டு போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். அவற்றுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன், அது எனக்கு நிறைய உதவியது.
நான் சைடு-சுழல் பந்துவீச்சாளராக இருந்தேன். ஆனால் இப்போது, நான் ஒரு ஓவர்-ஸ்பின் பந்துவீச்சாளராக முற்றிலும் மாறிவிட்டேன். தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர்களில் நான் சில சோதனைகளை மேற்கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வகை பந்துவீச்சில் பணிபுரிந்தேன்.
இது சுழல் பந்துவீச்சில் ஒரு சிறிய தொழில்நுட்ப அம்சம், ஆனால் அது எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்தது. நான் அதை டி.என்.பி.எல் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் படிப்படியாக சோதித்தேன். மன அம்சமும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும், நான் செய்த முயற்சியின் பெரும் பகுதி இருந்தது." என்று அவர் கூறினார்.
Varun Chakravarthy registers his best bowling figures in T20is. 👌
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 6, 2024
- A return to remember for Varun! 🇮🇳pic.twitter.com/MVLePesIn4
Varun Chakravarthy is back in Indian colours after a long hiatus of 3⃣ years 👏 pic.twitter.com/EgXh2d7J8E
— Cricbuzz (@cricbuzz) October 6, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.