Advertisment

தமிழக கிரிக்கெட் வீரராக தடம் பதித்த வி.பி சந்திரசேகர் திடீர் தற்கொலை! காரணம் இதுவா?...

வி.பி.சந்திரசேகர் நேற்று மாலை தனது ரூமில் பிணமாக கிடந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vb chandrasekhar death news

vb chandrasekhar death news

vb chandrasekhar death news : இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் வீரரும், டி.என்.பி.எல்., காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளருமான, வி.பி.சந்திரசேகர் நேற்று தனது இல்லத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் இழப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி பெருமை தேடி தந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து தோனியை சென்னை அணிக்காக தேர்ந்தெடுத்தவர் என ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரரான வி.பி.சந்திரசேகர் நேற்று மாலை தனது ரூமில் பிணமாக கிடந்தார்.

மதியம் தனது அறைக்கு சென்று கதவை மூடியவர் மாலை ஆகியும் கதவை திறக்காததால் அவரின் மனைவி சவுமியா ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது சந்திரசேகர் மின்விசிறியில் துக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே பதறிஅடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை சவுமியா உதவிக்கு அழைத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாப்பூர் காவல் துறையினர் சந்திரசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மயிலாப்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். விபி -யின் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

வி.பி சந்திரசேகரின் பயணம்:vp chandrasekhar

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர். இவர், 1988 - 90 வரை, இந்திய அணிக்காக, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.1987-88-ல் தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது, அதில் மிக முக்கிய பங்கு விபியை சேரும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியை சென்னை அணிக்கு தேர்ந்தெடுக்க முதன் முதலில் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். சிஎஸ்கே அணியில் பல முக்கிய மாற்றங்களை நிகழ்ந்த பல்வேறு யோசனைகளையும் வழங்கியுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய அணியின் தேர்வுக்குழுவிலும், 2012-13 ரஞ்சிக்கோப்பை சீசனில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்2004-2006-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் சந்திரசேகர். தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றை எட்டியது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் தங்களது அனுதாபங்களை வெளிபடுத்தி வருகின்றனர்.

Chennai Super Kings Ipl Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment