Advertisment

ஒரு போட்டிக்கு ரூ.67.8 கோடி… பி.சி.சி.ஐ ஊடக உரிமை வாரி சுருட்டிய வயாகாம்18!

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமையை வயாகாம்18 வாங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viacom18 wins BCCI media rights for TV and digital Tamil News

2023-2028 சுழற்சிக்கான இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமையை பாரமவுண்ட் குளோபல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான வயாகாம்18 நிறுவனம் வென்றது.

BCCI -  Viacom18 bags TV and digital rights Tamil News: 2023-2028 சுழற்சிக்கான பி.சி.சி.ஐ ஊடக உரிமை ஏலம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெற்றது. டிஸ்னி ஸ்டார், சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் வயாகாம்18 ஆகிய 3 முண்ணனி நிறுவனங்கள் உரிமைக்காக ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில், 2023-2028 சுழற்சிக்கான இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமையை பாரமவுண்ட் குளோபல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான வயாகாம்18 நிறுவனம் வென்றது.

Advertisment

வயாகாம்18 அதன் விளையாட்டு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த விரும்புகிறது. அதனால் இந்த வெற்றி அந்த நிறுவனத்திற்கு பெரிதும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமைகள் உலகின் மிக மதிப்புமிக்க ஊடக உரிமைகளில் ஒன்றாகும். மேலும், வயாகாம்18 இந்த உரிமைகளைப் பெறுவது பார்வையாளர்கள் மற்றும் வருவாயின் அடிப்படையில் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் ரூ.6,138 கோடிக்கு (ஒரு போட்டிக்கு ரூ. 60 கோடி) உரிமையைப் பெற்றது. அந்த மதிப்பீடு இப்போது ஐந்தாண்டு சுழற்சிக்கான ரூ.5,966.4 கோடியை எட்டியுள்ளது. அதாவது, ஒரு போட்டிக்கு ரூ.67.8 கோடி என மதிப்பட்டுள்ளது.

“அடுத்த 5 ஆண்டுகளுக்கு நேரியல் மற்றும் டிஜிட்டல் இரண்டிற்கும் பிசிசிஐ ஊடக உரிமைகளை வென்றதற்கு வயாகாம்18-க்கு வாழ்த்துகள். ஐபிஎல் மற்றும் மகளிர் ஐபிஎல்-க்குப் பிறகு இந்திய கிரிக்கெட் இரண்டு இடங்களிலும் தொடர்ந்து வளரும். பிசிசிஐ ஊடக உரிமைகளையும் விரிவுபடுத்துகிறோம். கிரிக்கெட் ரசிகர்களின் கற்பனையை நாங்கள் தொடர்ந்து கைப்பற்றுவோம்" என்று பிசிசிஐ செயலாளர் தனது ஜெய் ஷா X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமையை வயாகாம்18 வாங்கியது நிறுவனத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. வயாகாம்18 சேனல் ஒளிபரப்பும் போட்டிகள் ஜியோ சினிமாவில் ஒளிபரப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Bcci Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment