Advertisment

ரஞ்சி கிரிக்கெட்: தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா

பேக் டூ பேக் சாம்பியன் பட்டம், விதர்பா வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஞ்சி கிரிக்கெட்: தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா

ரஞ்சிக் கோப்பைத் தொடரில், சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி விதர்பா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2018-19 சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் தொடங்கியது. இதில் கடந்த சீசனின் சாம்பியன் விதர்பா உள்ளிட்ட 37 அணிகள் களமிறங்கின. ரஞ்சித் தொடர் வரலாற்றில் பெருமளவு கோலோச்சி வந்த மும்பை அணி எட்டு போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. அதேபோன்று, தமிழக அணியும் எட்டு போட்டிகளில் அடி ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்று வெளியேறியது.

ஒருவழியாக இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியன் விதர்பா அணியும், சவுராஷ்டிரா அணியும் தகுதிப் பெற்றன. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா 307 ரன்னும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 92.5 ஓவர்களில் 200 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்னெல் பட்டேல் 12 ரன்னிலும், ஹர்விக் தேசாய் 8 ரன்னிலும், மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்பித் வசவதா 5 ரன்னிலும், ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்னுடனும், கம்லேஷ் மக்வானா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். விதர்பா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட்டும், அக்‌ஷய் வாக்கரே ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டதால் விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

இந்நிலையில், இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சவுராஷ்டிரா அணி மொத்தமாகவே 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், விதர்பா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

கடந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் வென்று விதர்பா கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ranji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment