Advertisment

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... பாபரை ஓடிவந்து கட்டிக்கொண்ட ஆஸி வீரர் மகள் - வீடியோ

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Video Babar Azam hugs Usman Khawaja daughter Christmas ahead of 2nd PAK vs AUS Test at MCG Tamil News

பரபரப்பான டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே பார்ப்போரின் மனதை கவரும் வகையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் வீரர்கள் செயல்பட்டனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Australia-vs-pakistan | babar-azam: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறுகிறது. 

Advertisment

இந்நிலையில், பரபரப்பான டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே பார்ப்போரின் மனதை கவரும் வகையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் வீரர்கள் செயல்பட்டனர். மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்களின் பயிற்சி வலைகளுக்குச் சென்று கிறிஸ்துமஸைக் கொண்டாடினர்.

அப்போது ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளை பாகிஸ்தான் வீரர்கள் வழங்கி மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கினார்கள். இதேபோல், ஆஸ்திரேலிய வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். 

இந்த இனிமையான தருணத்தில் பாகிஸ்தான் வீரர் கேப்டன் பாபர் அசாமை ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவஜாவின் மகள், கை நீட்டியதும் ஓடிவந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கட்டிக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Babar Azam Australia vs Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment