scorecardresearch

நவீன் உல் ஹக்-ஐ ‘டீஸ்’ செய்த சென்னை ரசிகர்கள்: கோலி பெயரை குறிப்பிட்டு கோஷம்

சென்னையில் திரண்ட கோலியின் ரசிகர்கள் மீண்டும் நவீன் உல் ஹக்கை வம்புக்கு இழுத்து, கோலி பெயரை குறிப்பிட்டு கோஷம் போட்டுள்ளனர்.

Video: Chennai fans Teases Naveen Ul Haq With 'Kohli Kohli' Chants during LSG vs MI clash Tamil News
WATCH: Chennai Fans tease Naveen Ul Haq With Virat Kohli Chants During IPL 2023 Eliminator Tamil News

Chennai Fans tease Naveen Ul Haq With Virat Kohli Chants MI vs LSG – IPL 2023 Eliminator Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ – மும்பை அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக க்ரீன் 41 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து, 183 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோ அணியை மும்பை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி, பிளேஆஃப் சுற்றில் அடுத்து நடக்கும் குவாலிபையர்-2-க்கு தகுதி பெற்றுள்ளது.

மீண்டும் வம்பு இழுக்கப்பட்ட நவீன்-உல்-ஹக்

இந்நிலையில், இந்த போட்டியின் போது, சென்னை சேப்பாக்கத்தில் திரண்ட ரசிகர்கள் லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக்கை மீண்டும் வம்பு இழுத்தனர். அவர் பவுண்டரி லயனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, ரசிகர்களின் கூட்டத்தில் ஒரு பகுதியினர் அவரை குறிவைத்து விராட் கோலியின் பெயரை ‘கோலி… கோலி…’ என உச்சரித்து ஆரவாரம் செய்தனர். அப்போது அவர் ‘நன்றாக கத்துங்கள், சத்தம் கேட்கவில்லை’ என்பது போல் சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிட்டப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோதல்

முன்னதாக, மே 1ம் தேதி நடந்த போட்டியின் போது லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனான கோலி ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது களத்தில் நவீன் மற்றும் கோலி இருவரும் கடுமையான வார்த்தைகளை பேசிக்கொண்டனர். அதன்பிறகு, கோலிக்கும் – லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீருக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து லக்னோ அணி ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத்தில் விளையாடிபோது, அங்கு திரண்ட கோலியின் ரசிகர்கள் ‘கோலி… கோலி…’ என உச்சரித்து ஆரவாரம் செய்தனர். மேலும், டக்-அவுட்டில் அமர்ந்திருந்த கவுதம் கம்பீர் மீது கையில் கிடைத்த நட்டுகள், போல்ட்கள் போன்ற சிறிய பொருட்களை கொண்டு எறிந்தனர். இது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் திரண்ட கோலியின் ரசிகர்கள் மீண்டும் நவீன் உல் ஹக்கை வம்புக்கு இழுத்து கிண்டல் செய்துள்ளனர். இதேபோல், கவுதம் கம்பீர் மைதானத்திற்குள் நுழைத்த போது ரசிகர்கள் ‘கோலி… கோலி…’ என கோஷம் போட்டி கிண்டல் செய்தனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Video chennai fans teases naveen ul haq with kohli kohli chants during lsg vs mi clash tamil news

Best of Express