'இது டீம் இல்ல, விக்ரமன் சார் படம்': ஸ்டேடியத்தில் குழந்தைகளுடன் விளையாடிய சி.எஸ்.கே வீரர்கள்

சென்னை அணியின் வீரர்கள் தங்களது குழந்தைகளுடன் மைதானத்திற்குள் விளையாடி மகிழந்தனர்.

சென்னை அணியின் வீரர்கள் தங்களது குழந்தைகளுடன் மைதானத்திற்குள் விளையாடி மகிழந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Video: CSK stars playing games with their kids during training session Tamil News

A recent post shared by the Indian Premier League on social media shows numerous Chennai Super Kings players spending some quality time with their children.

CSK vs DC - IPL 2023 Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

Advertisment

இந்த ஆட்டத்தில் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால், டெல்லி அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்திய டெல்லி அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஸ்டேடியத்தில் குழந்தைகளுடன் விளையாடிய சி.எஸ்.கே வீரர்கள்

இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியின் வீரர்கள் தங்களது குழந்தைகளுடன் மைதானத்திற்குள் விளையாடி மகிழந்தனர். ஐ.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், எம்எஸ் தோனியின் மகள் ஜிவாவுடன் பல குழந்தைகளுடன் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடுவதையும், அவர்களின் அப்பாக்களுடன் நேரத்தை மகிழ்விப்பதையும் காணலாம்.

சிஎஸ்கே கேப்டன் தோனி தனது மகள் ஜிவாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், முன்னாள் சிஎஸ்கே வீரரும், ஐபிஎல்லின் தற்போதைய பதிப்பிற்கான ஜியோசினிமா வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கும் ராபின் உத்தப்பாவும் தனது மகனுடன் மைதானத்திற்குள் விளையாடி மகிழந்தார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Ms Dhoni Chennai Super Kings Delhi Capitals Csk Vs Dc Video Ipl News Ipl Cricket Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: