/indian-express-tamil/media/media_files/fw2VsFjB0TePafg1iMdP.jpg)
டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
David Warner: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் டேவிட் வார்னர். அதிரடி தொடக்க ஆட்டக்காரரான இவர், கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்களையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த ஃபார்மெட்டுகளில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள அவர், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடருடன் (கடந்த 6-ம் தேதி) சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருப்பினும், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பி.பி.எல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் எஸ்சிஜி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், சிட்னி தண்டர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் பிரபல ஹீரோவைப் போல ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் நடந்த தனது சகோதரரின் திருமணத்தில் வார்னர் கலந்துகொண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நேரடியாக இந்த போட்டியில் பங்கேற்பதற்காக திட்டமிட்ட அவர் காரில் சென்றால் தாமதமாகும் என கருதி ஹெலிகாப்டரில் வந்துள்ளார். இதனால் ஹெலிகாப்டரில் வார்னர் மாஸாக வந்து இறங்கியுள்ளார்.
களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களை குஷிப்படும் டேவிட் வார்னரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
David Warner has landed #BBL13pic.twitter.com/75RA1aaSW0
— Andrew McGlashan (@andymcg_cricket) January 12, 2024
Ever seen anything like it? 😆 🚁 @davidwarner31 arrives to the @scg on a helicopter to the Sydney Smash. #BBL13pic.twitter.com/gS4Rxmz71C
— KFC Big Bash League (@BBL) January 12, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.