/indian-express-tamil/media/media_files/2025/06/02/G0T8f61u0X9Piv451BZO.jpg)
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் வீழ்த்தி இருக்கும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி, அந்த நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் , 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்
இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் இன்று நடந்த 6-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். உலகின் நம்பர் 1 செஸ் வீரராக உள்ள கார்ல்சனுக்கும் உலக செஸ் சாம்பியன் குகேசுக்கும் இடையேயான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி குகேஷ் அபார வெற்றியைப் பெற்றார்.
குகேஷ் மற்றும் மேக்னஸ் கார்ல்சன் மோதும் போட்டியின் கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அந்த வீடியோவில் இருவரும் வேகமாக காய்களை நகர்த்துகிறார்கள். ஒரு கட்டத்தில் தான் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்த கார்ல்சன் செஸ் போர்டு இருந்த மேசை மேல் தனது வலது கையால் ஓங்கி குத்துகிறார். பிறகு எதிரே இருந்த குகேஷிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு 'ஓ மை காட்' என குறிப்பிட்டு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார் கார்ல்சன். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் வீழ்த்தி இருக்கும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். முன்னதாக, நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் குகேஷ் வெற்றிபெற்று கார்ல்சனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளையில், 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
Just another WOW moment for Indian sport: ! That moment when World Champion D Gukesh won his game against World no.1 Magnus Carlsen!
— Rajdeep Sardesai (@sardesairajdeep) June 2, 2025
Video Courtesy: Chess India @DGukesh you are a rock star!
⭐️⭐️⭐️⭐️⭐️ pic.twitter.com/SXIp1L2lWw
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.