T20 World Cup 2024 | New Zealand | Kane Williamson: 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Pleasure to announce you’: Watch how two ‘special guests’ announce New Zealand T20 World Cup squad
இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்து அணி பகிர்ந்துள்ள வீடியோவில் இரண்டு குழந்தைகள் மாடில்டா மற்றும் அங்கஸ் ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கிறார்கள். பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி வீரர்களின் பெயர்களை வெளியிடுகிறார்கள். முடிவில், ஏதேனும் கேள்வி இருக்கிறதா? என்று வினவுகிறார்கள்.
அனுபவம் வாய்ந்த அணி
ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சன் வழிநடத்துவார். அவர் 6வது முறையாக நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும், கேப்டனாக நான்காவது முறையை அணியை வழிநடத்துகிறார்.
இதேபோல், டிம் சவுதி 7-வது முறையாக டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ளார். மேலும் தற்போது டி20 போட்டி வரலாற்றில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் அவர் உள்ளார். அவரைத் தொடர்ந்து, அனுபவ வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் 5வது முறையாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணி, 2022 இல் வெஸ்ட் இண்டீசுக்கு சென்ற கடைசி சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்த 15 பேர் கொண்ட அணியில் 13 பேர் தற்போது டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ளனர். அத்துடன், 6 பேர் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர். பந்து வீச்சாளர் மாட் ஹென்றி மற்றும் பேட்டிங் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருவர் மட்டுமே, ஐசிசி டி20 உலகக் கோப்பை அனுபவம் இல்லாத வீரர்கள் ஆவர்.
காயம் அப்டேட்
ஆடம் மில்னே மற்றும் கைல் ஜேமிசன் இல்லாமல் நியூசிலாந்து விளையாடவுள்ளது. கணுக்கால் காயத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மில்னே நீக்கப்பட்டார். மேலும் கைல் ஜேமிசனும் அவரது முதுகில் ஏற்பட்ட காயத்தை மறுவாழ்வு செய்து வருவதால் அவர் தேர்வுக்கு கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் காயம் அணியுடன் பயணம் செய்து பயிற்சி மேற்கொள்வார்.
பயிற்சி ஊழியர்கள்
பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி மற்றும் ஜேக்கப் ஓரம் ஆகியோர் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் துணைப் பணியாளர் குழுவை நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் வழிநடத்துவார். அதே நேரத்தில் ஜேம்ஸ் ஃபோஸ்டர் பீல்டிங்கில் கவனம் செலுத்தி குழுவிற்கு உதவி பயிற்சியாளராக செயல்படுவார்.
ஜேக்கப் ஓரம் கடைசியாக வெஸ்ட் இண்டிசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளார். மேலும் கடைசியாக கரீபியனில் நடைபெற்ற மகளிர் தொடரில் நியூசிலாந்து மகளிர் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்:
வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், டிரெண்ட் போல்ட், மிட்செல் பிரெஸ்வேல், மார்க் சாப்மேன், கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நிஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி.
ரிசர்வ் வீரர்: பென் சீயர்ஸ்.
மேலும் இந்த தொடருக்காக புதிய ஜெர்சியையும் நியூசிலாந்து வாரியம் வெளியிட்டுள்ளது.
New Zealand throw it back for Men's #T20WorldCup 2024 👀
— ICC (@ICC) April 29, 2024
All the kits unveiled so far 👉 https://t.co/6ECGuwId0n pic.twitter.com/4p3SmLa2XF
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.