cricket-news: காஷ்மீரில் உள்ள வாகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் அமீர் ஹுசைன் லோன். தனது தந்தையின் மில்லில் பணிபுரியும் போது அவரது எட்டு வயதில் இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இருப்பினும், தனது நம்பிக்கையை இழக்காத அவர், அவரது கிரிக்கெட் திறமைகளை மெருகேற்றினார்.
அமீர் ஹுசைனின் கிரிக்கெட் ஆடும் திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் ஒருவர் அவரை தொழில்முறை விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தினயுள்ளார். “அந்த விபத்திற்குப் பிறகு, நான் நம்பிக்கையை இழக்கவில்லை, கடினமாக உழைத்தேன். என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும், நான் யாரையும் நம்பி இல்லை. என் விபத்துக்குப் பிறகு யாரும் எனக்கு உதவவில்லை. அரடு கூட எனக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால் எனது குடும்பம் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தது,” என்று அமீர் கூறினார்.
கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் பேட்டையைப் பிடித்துக்கொண்டு காலால் பந்துவீசுவதும், பேட்டிங் செய்வது அமீர் தனித்துவமாக இருந்து வருகிறார். "எனது ஆட்டத்திற்காக நான் எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டிருக்கிறேன். மேலும் எனது கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது கடவுளால் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கால்களால் பந்து வீசுவது மிகவும் கடினம், ஆனால் நான் அனைத்து திறன்களையும் நுட்பங்களையும் கற்றுக்கொண்டேன். நான் ஒவ்வொரு பணியையும் சொந்தமாகச் செய்கிறேன். கடவுளைத் தவிர யாரையும் நான் சார்ந்திருக்கவில்லை, ”என்று 34 வயதான அவர் கூறினார்.
அமீர் 2013 முதல் பாரா கிரிக்கெட் விளையாடி வருகிறார், தற்போது ஜம்மு காஷ்மீர் பாரா அணி கேப்டனாக உள்ளார். “நான் 2013 இல் டெல்லியில் தேசிய வீரராக விளையாடினேன். 2018 இல் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு சர்வதேச போட்டியில் விளையாடினேன். அதன் பிறகு நேபாளம், ஷார்ஜா, துபாயில் கிரிக்கெட் விளையாடினேன். நான் எனது கால்களால் விளையாடுவதையும் (பவுலிங்), தோள்பட்டை மற்றும் கழுத்தில் பேட்டிங் செய்வதையும் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கிரிக்கெட் விளையாட எனக்கு பலம் கொடுத்த கடவுளுக்கு நன்றி” என்று தனது கேரியரைப் பற்றி கூறினார் அமீர்.
சச்சின் டெண்டுல்கரும் ஆஷிஷ் நெஹ்ராவும் அமீரின் உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு கடந்த காலத்தில் ஒப்புக்கொண்டனர். பாராட்டுக்கு அடையாளமாக, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு பாரா கிரிக்கெட் வீரர் அமீரை நெஹ்ரா அழைத்திருந்தார்.
2023 ஆம் ஆண்டு 'ச ரே கா மா பா' என்ற ரியாலிட்டி ஷோவின் போது அமிரை சந்தித்த பாலிவுட் நட்சத்திரம் விக்கி கவுஷல், கிரிக்கெட் வீரர் அமீரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அப்போது பேசிய அவர், "எனக்கு எப்போதாவது ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க வாய்ப்பு கிடைத்தால், அது எந்த இந்திய கிரிக்கெட் வீரர்? என்கிற கேள்வி இருந்தது. இப்போது அதற்கு எனக்கு பதில் கிடைத்துள்ளது. ஒரு திரைப்படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால் நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுவேன்." என்று விக்கி கவுஷல் கூறினார்.
#WATCH | Anantnag, J&K: 34-year-old differently-abled cricketer from Waghama village of Bijbehara. Amir Hussain Lone currently captains Jammu & Kashmir's Para cricket team. Amir has been playing cricket professionally since 2013 after a teacher discovered his cricketing talent… pic.twitter.com/hFfbOe1S5k
— ANI (@ANI) January 12, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.