'டின்னருக்கா என்ன'... பும்ராவை பேட்டி எடுத்த மனைவி சஞ்சனா: வைரலாகும் கப்பிள் கோல்ஸ்!

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, போட்டிக்கு பிறகு அவரது மனைவியும், டி.வி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் பேட்டி எடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, போட்டிக்கு பிறகு அவரது மனைவியும், டி.வி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் பேட்டி எடுத்தார்.

author-image
WebDesk
New Update
Video Jasprit Bumrah Sanjana Ganesan couple goals moment goes Viral Tamil News

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி பும்ரா 3 விக்கெட்டை கைப்பற்றியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Jasprit Bumrah | India Vs Pakistan | T20 World Cup 2024:9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தியது. 

Advertisment

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் ஆல்-அவுட் ஆகி 119 ரன்களை எடுத்தது. இதனையடுத்து, 120 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் அணி துரத்திய நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி பும்ரா 3 விக்கெட்டை கைப்பற்றியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

பும்ராவை பேட்டி எடுத்த மனைவி சஞ்சனா

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை, போட்டிக்கு பிறகு அவரது மனைவியும், டி.வி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் பேட்டி எடுத்தார். அப்போது பேட்டி முடிந்ததும், பும்ராவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஞ்சனா, "மிக விரைவில் மீண்டும் சந்திப்போம்" என்று கூறினார். 

அதற்கு பதிலளித்த பும்ரா, "நான் உங்களை இன்னும் 30 நிமிடங்களில் சந்திப்பேன்." என்றார். அப்போது சஞ்சனா, "இரவு உணவுக்கா என்ன?" என்று வேடிக்கையாக கேட்டார். பின்னர் இருவரும் மாறி மாறி புன்னகையை தவழ விட்டனர். இந்த வீடியோவை ரசிகர்கள் 'கப்பிள் கோல்ஸ்' என்ற (#couplegoals) ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Vs Pakistan Jasprit Bumrah T20 World Cup 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: